சமூக ஊடகமான பேஸ்புக்கை உலகளவில் பெரும்பாலானோர் பயன்படுத்தி கொண்டிருக்கின்றனர். முதலில் இளைஞர்கள் மட்டுமே அதிகளவில் பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தும் நிலைக்கு வந்து விட்டது.

பேஸ்புக்கில் நமக்கு பிடித்தமான படங்களை, காணொளிகளை பதிவிடலாம். நமது கருத்துக்களை ஸ்டேட்டஸ் வாயிலாக பிறருக்கு தெரிவிக்க இயலும். அதுமட்டுமில்லாது  பிறரின் பிறரின் பதிவுகளை பகிர்ந்து கொள்ளும் வசதியும் இருக்கிறது.

இவ்வாறு போடப்படும் போஸ்ட்களுக்கு லைக், கமெண்ட், ஷேர் என்னும் ஆப்ஷன்கள் பேஸ்புக் நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ளது. முதலில் லைக் ஆப்ஷன்  மட்டுமே இருந்த நிலையில் பிறகு எமோஜி வடிவில் 6 புதிய ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டது. இவ்வாறு பிறரால் செய்யப்படும் லைக்ஸ் மற்றும் எமோஜி செயல்பாடுகள் எவ்வளவு வந்திருக்கிறது என்கிற எண்ணிக்கையை காட்டி கொண்டிருக்கும். இதில் தான் தற்போது மாற்றத்தை கொண்டு வர முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி எவ்வளவு லைக்ஸ் வந்திருக்கிறது என்று இனி பார்க்க முடியாது. அதை மறைக்க பேஸ்புக் நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இதற்கு காரணம் போஸ்ட்களின் தரத்தை லைக்ஸ் தீர்மானிப்பதாகவும், பிறரிடையே தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதனால் அதை மறைந்து வைக்க புதிய அப்டேட் வரவிருக்கிறது. அதே நேரத்தில் பதிவிடுபவர் தங்களுக்கு யார்யாரெல்லாம் லைக் செய்திருக்கிறார்கள் என்பதை எப்போதும் போல காண முடியும்.

ஏற்கனவே இன்ஸ்டாகிராம் எனப்படும் சமூக வலைதளத்தில் இந்த முறை நடைமுறைபடுத்தப்  பட்டிருக்கிறது. சிலநாடுகளில் சோதனை முறையில் செயல்பாட்டில் இருக்கும் இன்ஸ்டாகிராம் அப்டேட் பலரிடையே வரவேற்பை பெற்றுள்ள நிலையில், பேஸ்புக்கிலும் அதே போன்று விரைவில் வரவிருக்கிறது.

லைக்ஸ் அதிகமாக பெற பலர் தீவிரமாக பேஸ்புக்கில் இயங்கிவரும் நிலையில், அவர்கள் எல்லோருக்கும் இந்த புதிய அப்டேட் கட்டாயம் அதிர்ச்சியை கொடுக்கும்.