செருப்பில் மகாத்மா காந்தியின் படம்...டாய்லெட்டில் விநாயகர் படம்...கொழுப்பெடுத்து அலையும் அமேசான் நிறுவனம்...
இந்து மதத்துக்கும் மகாத்மா காந்திக்கும் இன்னும் எத்தனை சத்திய சோதனைகள் காத்திருக்கிறதோ தெரியவில்லை தற்போது அமேசான் நிறுவனமும் ஒரு முக்கிய சர்ச்சையில் மாட்டியுள்ளது.
இந்து மதத்துக்கும் மகாத்மா காந்திக்கும் இன்னும் எத்தனை சத்திய சோதனைகள் காத்திருக்கிறதோ தெரியவில்லை தற்போது அமேசான் நிறுவனமும் ஒரு முக்கிய சர்ச்சையில் மாட்டியுள்ளது.
ஒரு இணைய புத்தக சந்தையாக ஆரம்பிக்கப்பட்ட ‘அமேசான்’ அமெரிக்காவை தலைமை இடமாக கொண்ட பன்நாட்டு இணைய வணிக நிறுவனமாகும். அடிக்கடி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கும் இந்நிறுவனம் தற்போது ஒரே சமயத்தில் காந்தியையும், இந்து மதத்தையும் இழிவுபடுத்தி வழக்கு விசாரணையை எதிர்கொண்டுள்ளது.
உலகின் எந்த எல்லையில் இருந்தாலும் இணையத்தில் ஆர்டர் செய்யும் பொருட்களை வாடிக்கையாளர்களிடம் குறிப்பிட்ட நேரத்தில் கொண்டு சேர்க்கும் அமேசான் நிறுவனத்தின் இணையதளத்தில் சில தினங்களுக்கு முன் இந்து மத கடவுள்களின் ஸ்டிக்கர்களை டாய்லட் பேப்பர்கள், டாய்லட் மூடிகள், கால்மிதிகள் ஆகியவற்றில் ஒட்டி விற்பனைக்கென புகைப்படத்துடன் வெளியிட்டது.
இதனையடுத்து நொய்டாவைச் சேர்ந்த விகாஸ் மிஷ்ரா என்பவர் அமேசான் நிறுவனத்தின் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். இந்த புகாரில், ‘அமேசான் நிறுவனம் வெளியிட்ட விற்பனைக்கான புகைப்படங்கள், இந்து மத உணர்வை பெரிதும் புண்படுத்தியுள்ளது. இது நாட்டில் எப்போது வேண்டுமானாலும் சமுதாய பதற்றத்தை தூண்டலாம். எனவே, அமேசான் நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்று மேலும் நடக்காமல் இருக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தார்.
இதையடுத்து அமேசான் நிறுவனம் மீது மத உணர்வை புண்படுத்துவது தொடர்பான பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அமேசான் நிறுவனத்தை கண்டித்து ‘#BoycottAmazon' எனும் ஹாஷ்டாக் வைரலாகி வருகிறது. கமலின் இந்துமத துவேசத்துக்குப் பின் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் சதி இருக்கிறது என்கிற அதிமுகவினரின் அறிக்கைகளில் இனி அமேசானையும் சேர்த்துக்கொள்ளலாம்.