Asianet News TamilAsianet News Tamil

யூடியூப் பார்த்துக்கிட்டே இருக்கீங்களா? சியோமி 14 சிவி ஸ்மார்ட்போன் ஆஃபர் உங்களுக்குதான்!

3 மாத யூடியூப் பிரீமியம் சந்தா, 6 மாத 100GB Google One ஸ்டோரேஜ் இரண்டும் Xiaomi 14 Civi வாங்குபவர்களுக்கு இலவசமாகவே கிடைக்கும்.

Xiaomi 14 CIVI Smartphone Launched In India With Free YouTube Premium Subscription sgb
Author
First Published Jun 12, 2024, 4:38 PM IST

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி புதிய Xiaomi 14 CIVI (Cinematic Vision) ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. Xiaomi 14 CIVI ஸ்மார்ட்போனில் Xiaomi Pascal T1 சிக்னல் மேம்பாடு சிப் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பச்சை, நீலம் மற்றும் கருப்பு வண்ணங்களில் கிடைக்கிறது.

8GB + 256GB மற்றும் 12GB + 512GB என இரண்டு விதமான வேரியண்களில் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங் ஆப்ஷன் இல்லை. 8GB + 256GB மாடல் ரூ.42,999, 16GB + 512GB மாடல் விலை ரூ.47,999 விலையில் விற்கப்படும்.

வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் (Flipkart), Mi Home stores, Mi.com இணையதளங்களிலும் சியோமி ரீடெய்ல் பார்ட்னர் கடைகளிலும் வாங்கலாம். ஜூன் 20ஆம் தேதி மதியம் 12:00 மணி முதல் இந்த மொபைல் விற்பனைக்கு வரும். ஆனால், ஸ்மார்ட்போனை இன்றே முன்பதிவு செய்யலாம்.

இந்த மொபைல் வாங்குபவர்களுக்கு ரெட்மீ 3 ஆக்டிவ் (Redmi 3 Active) ஸ்மார்ட்வாட்ச் இலவசமாகக் கிடைக்கும். எனவே ரூ.50,000 விலைக்குள் சிறந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இருக்கும்.

iOS 18 ல் கேமிங் மோட் அறிமுகம்! ஐபோன்களில் அட்டகாசமான கேமிங் அனுபவத்துக்கு உத்தரவாதம்!

ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் அட்டைகள் மூலம் பணம் செலுத்தும்போது ரூ.3,000 தள்ளுபடியைப் பெறலாம். மேலும் 3 மாத யூடியூப் பிரீமியம் சந்தா, 6 மாத 100GB Google One ஸ்டோரேஜ் இரண்டும் Xiaomi 14 Civi வாங்குபவர்களுக்கு இலவசமாகவே கிடைக்கும்.

இரட்டை சிம் வசதி கொண்ட Xiaomi 14 CIVI ஆனது 6.55-இன்ச் 1.5K AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் மூலம் இயங்குகிறது. ஸ்மார்ட்போனில் 67W வயர்டு சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 4,700mAh பேட்டரி உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் Snapdragon 8s Gen 3 SoC பிராசஸர் கொண்டுள்ளது. இது வழக்கமான குளிரூட்டும் முறைகளைவிட மூன்று மடங்கு திறமையான IceLoop முறை உள்ளடக்கி இருக்கிறது.

Xiaomi 14 Civi டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. OIS உடன் 50 மெகாபிக்சல் லைட் ஃப்யூஷன் 800 இமேஜ் சென்சார், 2x ஜூம் கொண்ட 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் ஷூட்டர் ஆகியவை இதில் அடங்கும். முன்புறத்தில் 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது.

இந்தத் திறன்வாய்ந்த டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு லைகா மூலம் சம்மிலக்ஸ் லென்ஸ் (Summilux lens) உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 5G, Wi-Fi 6, NFC, GPS, கலிலியோ, ப்ளூடூத் 5.4, GLONASS, USB Type-C போர்ட் போன்ற பல வசதிகள் உள்ளன. கைரேகை சென்சார் டிஸ்ப்ளேயில் இருக்கிறது. AI தொழில்நுட்பத்தில் இயங்கும் ஃபேஸ் அன்லாக் சிஸ்டம் உள்ளது.

ஒரு லட்சம் இருந்தா போதும்... கெத்தா பைக் வாங்கலாம்! பல்சர் முதல் ஸ்பிளெண்டர் வரை வரிசை கட்டி நிக்குது!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios