Asianet News TamilAsianet News Tamil

50MP சூப்பர் நைட் கேமராவுடன் Vivo Y56 அறிமுகம்!

விவோ நிறுவனம் இந்தியாவில் Vivo Y56 என்ற சூப்பர் நைட் கேமராவுடன் கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்களை இங்குக் காணலாம்.

Vivo Y56 has been launched Rs 19,999 for the 8GB+128GB variant, check specs here
Author
First Published Feb 19, 2023, 2:07 PM IST

விவோ நிறுவனம் Y-சீரிஸில் புதிதாக Y56 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஒரு ஸ்டைலான வடிவமைப்பு, பல சுவாரஸ்யமான அம்சங்களுடன் வருகிறது. குறிப்பாக நீட்டிக்கப்பட்ட ரேம் 3.0, சூப்பர் நைட் கேமரா, 5000 mAh சக்தி கொண்ட பெரிய பேட்டரி ஆகியவை உள்ளன.

இது தொடர்பாக விவோ இந்தியாவின் பிராண்ட் ஸ்ட்ரேடஜியின் தலைவர் யோகேந்திர ஸ்ரீராமுலா கூறுகையில், ‘எங்கள் Y-சீரிஸ் வரிசையில் மற்றொரு தயாரிப்பைச் சேர்ப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இளம் வாடிக்கையாளர்களுக்கு புதுவிதமான அம்சங்களை வழங்க வேண்டும் என்ற எங்கள் இலக்குடன் இந்த ஸ்மார்ட்போன் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு புதிய ஸ்டைலான மற்றும் நவநாகரீக ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துகிறோம். vivo Y56 5G என்பது Y-சீரிஸில் 20 ஆயிரம் பட்ஜெட்டில் வரும் முதல் 5G ஸ்மார்ட்போன் ஆகும்’ என்று தெரிவித்தார்.

Vivo Y56: விலை, விற்பனை தேதி:

Vivo Y56 ஸ்மார்ட்போனின் விலை ரூ.19,999 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஒரு 8ஜிபி ரேம் +128ஜிபி மெமரி மாடல் ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இன்று முதல் vivo இ-ஸ்டோர், வெளிக்கடைகள், ஷோரூம்களில் கிடைக்கும். ஆரஞ்சு ஷிம்மர் மற்றும் பிளாக் எஞ்சின் என இரண்டு வண்ண நிறங்களில் கிடைக்கும். ஐசிஐசிஐ, எஸ்பிஐ மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி வாடிக்கையாளர்கள் ரூ.1,000 வரை கேஷ்பேக் பெறலாம்.

OIS கேமரா, 120W சார்ஜிங் வசதியுடன் iQOO Neo 7 ஸ்மார்ட்போன் அறிமுகம்!

Vivo Y56: சிறப்பம்சங்கள்

Vivo Y56 ஆனது 6.58-inch (16.72 cm) FHD+ டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமன்சிட்டி  700 பிராசசர் மூலம் இயக்கப்படுகிறது, இது 5G சிப்செட் ஆகும், இது 2.2 GHz வரையிலான நீட்டிக்கப்பட்ட 8ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. புத்தம் புதிய ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம், FunTouch OS 13 அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது.  5000mAh சக்தி கொண்ட பேட்டரி, அதற்கு ஏற்ப 18W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் வருகிறது. 

கேமராவைப் பொறுத்தவரை, Vivo Y56 ஆனது 50 மெகாபிக்சல் இருப்பது சிறப்பு. இது நைட் விஷன் கேமரா என்று கூறப்படுகிறது. இதனுடன் 2-மெகாபிக்சல் பொக்கே கேமரா உள்ளது.  இது பகலிலும், இரவிலும் தெளிவான புகைப்படங்களை எடுக்க உதவுகிறது. முன்பக்கத்தில், இது 16MP கேமராவைக் கொண்டுள்ளது,. Y56 ஆனது சூப்பர் நைட் கேமரா மோட், பொக்கே ஃபிளேர் போர்ட்ரெய்ட், புரொபஷனல் வ்யூஃபைண்டர் சிஸ்டம் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
 

Follow Us:
Download App:
  • android
  • ios