இது iPhone போலவே இருக்கும், அற்புதமாக இருக்கும்.. ஆனால் iPhone இல்லை!
ஐபோன் போலவே செயல்படக்கூடிய, கைக்கு அடக்கமாக இருக்கக்கூடிய ஒரு போன் கிடைத்தால் எப்படி இருக்கும்? இங்கு அப்படியான ஒரு போனை பற்றி காணலாம்.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் அறிமுகம் ஆகும் போதெல்லாம் எப்படியும் உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு மேலோங்குவது வழக்கம். அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் ஐபோன் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இருப்பினும் அதிக தொகை கொடுத்து ஐபோன் வாங்குவதற்கு பலரும் கஷ்டமாக இருக்கலாம். அவர்களுக்காகவே LeEco S1 Pro என்ற சீன ஸ்மார்ட்போன் வந்துள்ளது.
இது பார்ப்பதற்கு அப்படியே ஐபோன் போலவே இருக்கும். LeEco S1 Pro ஆனது சீனாவில் 8GB RAM, 128GB மாடலின் விலை CNY 899 (தோராயமாக ரூ. 10,900) என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஐபோன் 14 ப்ரோவின் அடிப்படை மாடலை விட மலிவானது. ஐபோன் 1,29,900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது சுமார் ரூ 1.19 லட்சம் வித்தியாசத்தில், போலி ஐபோன் உள்ளது.
LeEco S1 Pro ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே, HD+ (720x1600px), 60Hz ரெப்ரெஷ் ரேட், டைனமிக் ஐலேண்ட், 12nm Zhanrui T7510 பிராசசர் உள்ளன. ஐபோன் போலவே LeEco S1 Pro ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் மூன்று கேமராக்களைக் கொண்டுள்ளது, மேலும் ஐபோன் 14 ப்ரோவில் உள்ள சென்சார்களைப் போலவே இடவசதி, அமைப்பும் உள்ளது. முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் செல்பி கேமராவும் உள்ளது. மேலும், 5,000mAh சக்தி கொண்ட பேட்டரி, 10W சார்ஜிங் வசதி உள்ளன.
Amazon Great Republic Day: 5ஜி ஸ்மார்ட்போன்கள் வாங்க சரியான நேரம்?
LeEco S1 Pro போனானது குறிப்பாக சீன சந்தைக்காக வடிவமைக்கப்பட்டுள்ளதால், கூகுள் மொபைல் சேவைகளுக்கு பதிலாக Huawei இன் மொபைல் சேவைகளை கொண்டுள்ளது. ஜிஎம்எஸ் (கூகுள் மொபைல் சேவைகள்) சீனாவில் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. LeEco S1 Pro ஐபோன் 14 ப்ரோவைப் போலவே தோற்றமளிக்கும் அதே வேளையில், பல முக்கிய ஆண்ட்ராய்டு தொலைபேசி தயாரிப்பாளர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களுக்காக ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து உத்வேகம் பெற்றுள்ளனர்.
2016 ஆம் ஆண்டில் ஆப்பிள் 3.5 மிமீ ஆடியோ ஜாக்கை அகற்றிய பிறகு, இன்று பெரும்பாலான ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் மிட்-பட்ஜெட் மற்றும் பிரீமியம் போன்களிலும் ஆடியோ ஜாக்கை தவிர்த்துவிட்டனர். ஐபோன் 12 அறிமுகப்படுத்தப்பட்ட பிளாட் எட்ஜ்கள், Vivo உள்ளிட்ட பல ஃபோன்களில் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.