Asianet News TamilAsianet News Tamil

அட்டகாசமான AI அம்சங்களுடன் இன்று வெளியாகிறது "iQOO Z9s Pro"!

iQOO Z9s Pro மொபைல் இந்தியாவில் இன்று அறிமுகமாகிறது. இது, Snapdragon 7 Gen 3 Chipset, 12 GB RAM மற்றும் AI அம்சங்களை கொண்டுள்ளது. iQOO Z9s Pro மொபைலின் விலை, எதிர்பார்ப்புகள் மற்றும் அதன் சிறப்புகள் இதோ..
 

The iQOO Z9s Pro is scheduled to launch on Aug 21. look at the price and specifications! dee
Author
First Published Aug 21, 2024, 8:55 AM IST | Last Updated Aug 21, 2024, 8:55 AM IST

iQOO Z9s Pro (ஆகஸ்ட் 21) இன்று வெளியாகிறது. Vivo நிறுவனத்தின் துணை பிராண்டான இதில ஏற்கனவே கேமரா உள்ளிட்ட பல அம்சங்கள் மக்களிடையே வரவரேற்பை பெற்றுள்ளது. பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் சிறந்த செயல்திறன், மேம்படுத்தப்பட்ட காட்சி மற்றும் AI அம்சங்களுடன் கூடிய புது மொபைல் வரும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. iQOO Z9s Pro சிறப்புகள் மற்றும் விலை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

iQOO Z9s Pro Specifications

iQOO Z9s Pro மொபைல் 6.77 இன்ச் 3D வளைந்த AMOLED பேனல் உடன் 120Hz (ஹெர்ட்ஸ்) Refresh rate வீதம் மற்றும் 4,500 Nits உச்ச பிரகாசத்துடன் வெளியாகிறது. hood-ன் கீழ் இந்த ஸ்மார்ட்போன் சிறந்த கேமிங் மற்றும் செயல்திறனுக்காக கூலிங் சேம்பருடன் Snapdragon 7 Gen 3 chipset மூலம் இயங்குகிறது. இது 12GB RAM மற்றும் 256 ஜிபி வரை Storage இரண்டு வேரியண்ட்களை பெறலாம். இந்த ஸ்மார்ட்போன் 80W Fast Charging வசதியுடன் வருகிறது. மேலும் இதில் 5,500 mAh பேட்டரியை கொண்டுள்ளது. இது 2 வருட ஆண்ட்ராய்டு மென்பொருள் புதுப்பிப்பு மற்றும் 3 வருட பாதுகாப்பு புதுப்பிப்புகளுடன் வெளிவருகிறது.. இந்த மொபைல் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான FunTouchOS 14 இல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொஞ்ச நாள் பொறு தலைவா.. நாடே எதிர்பார்க்கும் 3 புதிய ஸ்மார்ட்போன்கள் வருது!

iQOO Z9s Pro ஆனது 50 MP Sony IMX882 OIS கேமரா மற்றும் OIS மற்றும் 4K வீடியோ பதிவு திறன்களுடன் கூடிய 8 MP அல்ட்ரா-வைட் கேமராவை கொண்டுள்ளது.இது 2x டிஜிட்டல் ஜூம் அம்சத்துடன் சூப்பர் நைட் மோட் மற்றும் போர்ட்ரெய்ட்களையும் சூட் வசதியையும் கொண்டுள்ளது. இதில், மேலும் சில AI அம்சங்களுடன் IP64 தூசி மற்றும் நீர் எதிர்ப்பு திறனையும் கொண்டுள்ளது.

iQOO Z9s Pro Price Expectations

iQOO Z9s Pro விலை சுமார் ரூ.25,000 ஆக இருக்கலாம். புரோ அல்லாத iQOO Z9 களின் விலை சுமார் ரூ. 20,000 ஆக இருக்கலாம். இந்த ஸ்மார்ட்போன் அமேசான், iQOO இந்தியா இணையதளம் மற்றும் பிற பார்ட்னர் சேனல்களில் வெளியாகிறது. வாங்க விரும்புபவர்கள் இன்றே புக்செய்து கொள்ளலாம்.

Budget Smart Phones: ரூ.30,000-க்குள் வாங்கக்கூடிய டாப் 5G ஸ்மார்ட்போன்கள்!!
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios