மலிவு விலையில் 5ஜி ஸ்மார்ட்போன் உருவாக்கும் சாம்சங்... இணையத்தில் லீக் ஆன சூப்பர் தகவல்..!
சாம்சங் அறிமுகம் செய்த கேலக்ஸி M12 ஸ்மார்ட்போனும் வாட்டர் டிராப் நாட்ச், குவாட் கேமரா மாட்யுல், பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.
சாம்சங் நிறுவனம் உருவாக்கி இருக்கும் புதிய கேலக்ஸி M13 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக ஸ்மார்ட்போன் ப்ளூடூத் சான்றளிக்கும் வலைதளத்தில் இடம்பெற்று இருந்தது. இதைத் தொடர்ந்து பல்வேறு இதர வலைதளங்களில் புதிய M சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களின் புகைப்படங்கள் வெளியாகி இருந்தது.
இந்த வரிசையில், பெடரல் கம்யூனிகேஷன் கமிஷன் (FCC) எனும் மற்றொரு சான்று அளிக்கும் வலைதளத்தில் புதிய சாம்சங் கேலக்ஸி M13 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் வெளியாகி இருக்கிறது. இந்த வலைதளத்தின் படி புது சாம்சங் ஸ்மார்ட்போன் SM-M135M எனும் மாடல் நம்பர் கொண்டிருப்பது தெரியவந்து உள்ளது. FCC வலைதள விவரங்களின் படி இந்த ஸ்மார்ட்போனில் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. எனினும், ஸ்மார்ட்போனுடன் 15 வாட் பாஸ்ட் சார்ஜர் வழங்கப்படுமா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.
அம்சங்கள்:
முன்னதாக வெளியாகி இருந்த தகவல்களில் சாம்சங் கேலக்ஸி M13 5ஜி ஸ்மார்ட்போன் ப்ளூடூத் 5.0 வசதி கொண்டிருக்கும் என கூறப்பட்டது. இதன் பின்புறம் டூயல் பிரைமரி கேமரா செட்டப் வழங்கப்படும் என கூறப்படுகிறது. அதன்படி 50MP பிரைமரி கேமரா, 2MP இரண்டாவது டெப்த் கேமரா கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் IPS LCD டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட் மற்றும் வாட்டர் டிராப் நாட்ச் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
ஏற்கனவே சாம்சங் அறிமுகம் செய்த கேலக்ஸி M12 ஸ்மார்ட்போனும் வாட்டர் டிராப் நாட்ச், குவாட் கேமரா மாட்யுல், பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஓன்யு.ஐ. 3.1 ஓ.எஸ். கொண்டிருக்கிறது. இத்துடன் 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் எக்சைனோஸ் 850 பிராசஸர், 4GB ரேம், 64GB மெமரி மற்றும் 6000mAh பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 48MP பிரைமரி கேமரா, 5MP இரண்டாவது கேமரா, இரண்டு 2MP சென்சார்களும் 8MP செல்பி கேமராவும் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 4ஜி எல்.டி.இ., வைபை, ப்ளூடூத், ஜி.பி.எஸ்., என்.எப்.சி. மற்றும் யு.எஸ்.பி. போர்ட் வழங்கப்பட்டு உள்ளது.