ரெட்மி நிறுவனம் ரெட்மி 12 சீரிஸில் தற்போது புதிதாக Redmi 12C என்ற பட்ஜெட் ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்களை இங்குக் காணலாம்.

ரெட்மி நிறுவனம் சீனாவில் ரெட்மி 12சி என்ற பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. போதுமான அம்சங்கள் இருந்தால் போதும், அதுவும் தரமானதாக இருந்தாலே போதும் என்று விரும்புகிறவர்களுக்காகவே இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. வீட்டில் பெரியவர்கள், சிறியவர்கள் இருந்தால், இந்த ஸ்மார்ட்போனை பரிசாக வழங்கலாம். இந்த ரெட்மி 12சி என்ற ஸ்மார்ட்போன் இந்தியாவுக்கு எப்போது வரும் என்பது குறித்த விவரங்கள் விரைவில் தெரியவரும்.

Redmi 12C சிறப்பம்சங்கள்: 

  • டிஸ்ப்ளே: 6.71-இன்ச் (1650 x 720 பிக்சல்கள்) HD+ டிஸ்ப்ளே
  • பிராசசர்: ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G85 12nm பிராசசர் 
  • GPU: 1000MHz ARM Mali-G52 2EEMC2 GPU
  • ரேம்: 4GB ரேம், microSD மூலம் 512GB வரை விரிவாக்கக்கூடிய மெமரி
  • ஆண்ட்ராய்டு: MIUI 13 - Android 12
  • சிம் வகை: டூயல் சிம் (நானோ + நானோ + மைக்ரோ எஸ்டி)
  • பின்புற கேமரா: 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார் கேமரா
  • முன்புற கேமரா: 5MP முன் கேமரா
  • சென்சார்: பின்புறத்தில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார்
  • ஆடியோ: 3.5mm ஆடியோ ஜாக், FM ரேடியோ
  • அளவு: 168.76×76.41×8.77mm; எடை: 192 கிராம்
  • பேட்டரி வகை: 10W சார்ஜிங்குடன் 5000mAh (வழக்கமான) பேட்டரி

கூடுதல் அம்சங்கள்: டூயல் சிம் 4G VoLTE, Wi-Fi 802.11 ac (2.4GHz + 5GHz), புளூடூத் 5.1, GPS + GLONASS, மைக்ரோ USB போர்ட் ஆகியவை உள்ளன.

Gpay, PhonePe வேலை செய்யவில்லையா? அப்போ இத ட்ரை பண்ணி பாருங்க!

விலை மற்றும் விற்பனை தேதி:

Redmi 12C ஆனது நிழல் கருப்பு, அடர் நீலம், புதினா பச்சை மற்றும் லாவெண்டர் ஆகிய வண்ணங்களில் வருகிறது, இதன் 4GB + 64GB மாடலின் விலை 699 யுவான் (US$ 101 / ரூ. 8,370 தோராயமாக), 4ஜிபி+128ஜிபி மாடலின் விலை 799 யுவான் (US$ 115 / Rs. 9,565 தோராயமாக) மற்றும் 6ஜிபி+128ஜிபி மாடலின் விலை 899 யுவான் (அமெரிக்க டாலர் 130/ரூ. 10,765 தோராயமாக) . இது ஏற்கனவே சீனாவில் விற்பனைக்கு வந்துள்ளது.