Asianet News TamilAsianet News Tamil

குறைந்த விலையில் 6ஜிபி ரேம் போனா! வந்துவிட்டது Redmi 12C

இந்தியாவில் ரெட்மி 12 C ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.

Redmi 12C launched in India starting at Rs. 8999, check specs and details here
Author
First Published Mar 31, 2023, 6:27 PM IST

ஷாவ்மி நிறுவனம் ஏற்கெனவே கூறியிருந்தபடி, Redmi 12 சீரிஸில் தற்போது பட்ஜெட் விலையில் ஒரு அட்டகாசமான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இது Redmi 12C ஆகும். இந்த போனில் 6.71-இன்ச் HD+ டிஸப்ளே, நாட்ச் உடன் கூடிய 5MP செல்ஃபி கேமரா,  ஹூலியோ G85 SoC பிராசசர் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.  6GB வரை ரேம், 2MP டெப்த் சென்சார் கேமரா, 50MP பிரைமரி கேமரா உள்ளன.

இதன் விலை 8,999 ரூபாயிலிருந்து தொடங்குகிறது. இந்த விலையில் ஆண்ட்ராய்டு 12. MIUI 13 வழங்கப்படுகிறது. இதில் உள்ள பேனல் மிருதுவாக இருப்பதால், கைரேகை என்பது படியாது.  கடினமான பேனல் இருப்பதால் நீடித்து உழைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போனின் பின்புறத்தில் கைரேகை சென்சார் இருப்பது சிறப்பு. 10W சார்ஜர், 5000mAh பேட்டரியுடன் வருகிறது. 

Redmi 12C சுருக்கமான அம்சங்கள்:

  • திரை: 6.71-இன்ச் (1650 x 720 பிக்சல்கள்) HD+ 20.6:9 
  • ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G85 12nm பிராசசர்
  • ரேம்: 4ஜிபி ரேம் 64GB மெமரி. இன்னொரு மாடலில் 6ஜிபி ரேம் 128 GB மெமரி உள்ளது. 
  • மெமரி: கூடுதலாக 512GB வரை விரிவாக்கக்கூடிய மெமரி கார்டு வசதி நினைவகம்
  • இயங்குதளம்: MIUI 13 உடன் ஆண்ட்ராய்டு 12
  • சிம் வகை: டூயல் சிம் (நானோ + நானோ + மைக்ரோ எஸ்டி)
  • பிராசசர்: 50MP பின்புற கேமரா, 2MP டெப்த் சென்சார், 5MP முன் கேமரா
  • சென்சார்: பின்புறத்தில் கைரேகை சென்சார் பொருத்தப்பட்டுள்ளது
  • சவுண்ட்: 3.5mm ஆடியோ ஜாக், FM ரேடியோ
  • கூடுதல் அம்சங்கள்: தூசி, நீர்த்துளியில் இருந்து பாதுகாப்பு (IP52)
  • பரிமாணம் அளவு : 168.76×76.41×8.77mm; எடை: 192 கிராம்
  • பிற அம்சங்கள்: டூயல் 4G VoLTE, Wi-Fi 802.11 ac (2.4GHz + 5GHz), புளூடூத் 5.1, GPS + GLONASS, மைக்ரோ USB போர்ட்
  • பேட்டரி: 10W சார்ஜிங் நுட்பம், 5000mAh சக்தி கொண்ட பேட்டரி
TECNO Spark 10 5G: கூலிங் தொழில்நுட்பத்துடன் குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்!

விலை மற்றும் விற்பனை தேதி: 

Redmi 12C ஸ்மார்ட்போனானது மேட் பிளாக், ராயல் ப்ளூ, புதினா பச்சை, லாவெண்டர் ஊதா நிறங்களில் வருகிறது. 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடலின் விலை 8,999 மற்றும் 6 ஜிபி ரேம்,  128 ஜிபி மெமரி மாடலின் ரூ. 10,999 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது  Amazon.in , Mi.com, Mi Studio, Mi Home தளங்களில் கிடைக்கும். வரும்  ஏப்ரல் 6 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது.  ஐசிஐசிஐ வங்கி கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரூ. 500 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios