ரூ. 13 ஆயிரம் பட்ஜெட்டில் புது 5ஜி போன்... ரெட்மி போடும் சூப்பர் ஸ்கெட்ச்... வெளியீடு எப்போ தெரியுமா?
சியோமி நிறுவனத்தின் குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன் மாடலின் இந்திய வெளியீட்டு தகவல் வெளியாகி உள்ளது.
ரெட்மி 11 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரெட்மி 10 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் என கூறப்படுகிறது.
மேலும் இந்த சீரிசில் 5ஜி கனெக்டிவிட்டியுடன் களமிறங்கும் முதல் ஸ்மார்ட்போன் இது என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர், 5000mAh பேட்டரி, 18W பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என தெரிகிறது.
இத்துடன் 6.58 இன்ச் FHD+ 90Hz எல்.சி.டி. டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர், 4GB ரேம், 64GB இண்டர்னல் மெமரி, 50MP பிரைமரி கேமரா, 2MP டூயல் கேமரா, 5MP செல்பி கேமரா உள்ளிட்ட அம்சங்களை கொண்டு இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்படலாம்.
ரெட்மி 11 5ஜி எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
- 6.58 இன்ச் FHD+ 90Hz ரிப்ரெஷ் ரேட் எல்.சி.டி. டிஸ்ப்ளே
- மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர்
- 4GB ரேம்
- 64GB இண்டர்னல் மெமரி
- 50MP பிரைமரி கேமரா
- 2MP இரண்டாவது கேமரா
- 5MP செல்பி கேமரா
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
-5000mAh பேட்டரி
- 18W பாஸ்ட் சார்ஜிங் வசதி
விலை விவரங்கள்:
இந்தியாவில் ரெட்மி 11 5ஜி ஸ்மார்ட்போனின் 4GB ரேம், 64GB மெமரி மாடல் விலை ரூ. 13 ஆயிரத்து 999 வரை நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 2022 இரண்டாவது காலாண்டு அல்லது ஜூன் மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம். புதிய ரெட்மி 5ஜி போன் பற்றி அந்நிறுவனம் சார்பில் இதுவரை எந்த தகவலும் வெள்யிடப்படவில்லை.