Realme GT3 with 240W fast charging : வந்துவிட்டது Realme GT 3 ஸ்மார்ட்போன்! பிரீமியம் அம்சங்கள் இருக்கிறதா?

240W சார்ஜிங், 144Hz டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 8+ Gen 1 SoC பிராசசர் என பிரீமியம் அம்சங்களுடன் Realme GT 3 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

Realme GT 3 has been announced at MWC 2023, check specs here

Realme GT 3 ஸ்மார்ட்போன் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 240W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் வருகிறது. ஸ்மார்ட்போனை மிக வேகமாக சார்ஜ் செய்ய விரும்புபவர்களை இலக்காகக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

குறிப்பிடத்தக்க வகையில் இந்த ஸ்மார்ட்போனில் 144Hz டிஸ்ப்ளே, ஸ்நாப்டிராகன் 8+ Gen 1 SoC பிராசசர் என பிரீமியம் அம்சங்களும் உள்ளன. 
Realme GT 3 ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் LED லைட் கொண்டுள்ளது. இது அப்படியே நத்திங் ஃபோனை (1) பிரதிபலிக்கும் வகையில் உள்ளது. இருப்பினும், இந்த Realme ஃபோனில் ஒரே ஒரு LED ஸ்டிரிப் மட்டுமே, அதுவும் கேமரா பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. உங்கள் ஸ்மார்ட்போனில் நோட்டிபிகேஷன் வரும் போது இந்த எல்இடி லைட் ஒளிரும். நத்திங் ஃபோனில் உள்ள லைட்டுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்றால், இதில் ஒளியின் நிறத்தை மாற்றிக்கொள்ளலாம். 

Realme GT 3 போனில் 240W சார்ஜிங் நுட்பம் இருப்பது சிறப்பு. எந்த நேரத்திலும் உடனடியாக சார்ஜ் ஏற்றி வைத்துக்கொள்ளலாம். அதற்கு ஏற்ப 4,600mAh சக்தி கொண்ட பேட்டரி கொண்டுள்ளது. 240W சார்ஜர் என்று சொல்லும் போது வெறும் 4 நிமிடங்களில் 50 சதவீத சார்ஜ் ஏறிவிடும் என்று ரியல்மி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

வேகமான செயல்திறனை வழங்குவதற்காக குவால்காம் சிப்பை ரியல்மி பயன்படுத்தியுள்ளது. மொபைல் சூடாவதை குறைக்கும் வகையில் ஸ்டெயின்லெஸ் குளிரூட்டும் அமைப்பும் உள்ளது. மற்றபடி, சவுண்டுக்காக டால்பி அட்மோஸுடன் கூடிய இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் ஆகியவை உள்ளன.

Realme GT 3 போனில் 6.74-இன்ச் திரை, 144Hz ரெப்ரெஷ் ரேட் உள்ளது. மேலும், ரெப்ரெஷ் ரேட் ஆனது 40Hz, 45Hz, 60Hz, 72Hz, 90Hz, 120Hz மற்றும் 144Hz என தானாகவே மாறிக்கொள்ளும் என்று ரியல்மி கூறுகிறது. ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பு உள்ளது. பின்புற கேமரா அமைப்பில் 50-மெகாபிக்சல் சோனி IMX890 சென்சார் உள்ளது, இது OIS தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. கூடுதலாக 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் சென்சார் கேமராக்கள் உள்ளன.

Airtel Price Hike: ஏர்டெல் நெட்வொர்க்கில் வாய்ஸ் கால், டேட்டா கட்டணங்கள் உயர்வு!

Realme GT 3 இந்தியாவில் எப்போது அறிமுகப்படுத்தப்படும்?

Realme GT 3 இந்தியவுக்கு மிக விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் தற்போது வரை, சரியான வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios