Realme C31: சூப்பர் சலுகைகள்.. தரமான அம்சங்கள்.. இந்தியாவில் விற்பனைக்கு வந்த ரியல்மி போன்...!
Realme C31: ரியல்மி C31 ஸ்மார்ட்போன் லைட் சில்வர் மற்றும் டார்க் கிரீன் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது.
ரியல்மி நிறுவனத்தின் புதிய ரியல்மி C31 ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை இன்று துவங்குகிறது. ரியல்மி GT 2 ப்ரோ மாடலின் தோற்றத்தில் உருவாகி இருக்கும் ரியல்மி C31 அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ரியல்மி C21 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் ரியல்மி C31 மாடல் கேமிங் தவிர்த்த இதர பணிகளை மேற்கொள்வதற்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ரியல்மி C31 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் 3GB ரேம், 32GB மெமரி மற்றும் 4GB ரேம், 64GB மெமரி என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 8 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 9 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ரியல்மி C31 ஸ்மார்ட்போன் லைட் சில்வர் மற்றும் டார்க் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை இன்று (ஏப்ரல் 6) மதியம் 12 மணிக்கு துவங்குகிறது. விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி ஆன்லைன் ஸ்டோர், அருகாமையில் உள்ள விற்பனை மையங்களில் நடைபெறுகிறது.
சலுகை விவரங்கள்:
ரியல்மி ஆன்லைன் ஸ்டோரில் புதிய ரியல்மி C31 ஸ்மார்ட்போன் வாங்குவோர் பே.டி.எம். பயன்படுத்தும் போது ரூ. 1000 கேஷ்பேக் பெற முடியும். இதே போன்று தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி மாத தவணையில் வாங்கும் போது ரூ. 500 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன்படி ரியல்மி C31 மாடல்கள் விலை முறையே ரூ. 8 ஆயிரத்து 499 மற்றும் ரூ. 9 ஆயிரத்து 499 என மாறி விடும்.
ரியல்மி C31 அம்சங்கள்:
- 6.52 இன்ச் 1600x720 பிக்சல் HD+ LCD ஸ்கிரீன்
- 1.82 GHz UNISOC T612 ஆக்டா கோர் பிராசஸர்
- மாலி-G57 GPU
- 3GB LPDDR4X ரேம், 32GB UFS 2.2 மெமரி
- 4GB LPDDR4X ரேம், 64GB UFS 2.2 மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் ரியல்மி யு.ஐ. ஆர் எடிஷன்
- 13MP பிரைமரி கேமரா, f/2.2
- 2MP மேக்ரோ கேமரா, f/2.4
- VGA B&W போர்டிரெயிட் சென்சார், f/2.8
- 5MP செல்ஃபி கேமரா, f/2.2
- 3.5mm ஆடியோ ஜாக், FM ரேடியோ
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 4G வோல்ட்இ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.0
- மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட்
- 5,000mAh பேட்டரி
- 10 வாட் சார்ஜிங்