POCO C50 ஸ்மார்ட்போன் வாங்கலாமா வேண்டாமா?
அண்மையில் அறிமுகமான POCO C50 ஸ்மார்ட்போனிலுள்ள சிறப்பம்சங்கள், செயல்திறன் குறித்த முழுமையான விவரங்களை இங்குக் காணலாம்.
POCO C50 சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஸ்மார்ட்போன் மிகவும் மலிவு விலையில் உள்ளது. குறைந்த விலையில் 4G விரும்பும் வாடிக்கையாளர்களுக்காகவே இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
POCO C50 இந்தியாவில் இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. அவை: ராயல் புளூ மற்றும் கண்ட்ரி கிரீன். POCO C50 சுவாரஸ்யமான விஷயங்கள் இல்லை என்றாலும், விலைக்கு ஏற்ற அம்சங்கள் உள்ளதா, அதன் செயல்திறன் எப்படி உள்ளது, யாருக்கு இந்த போன் ஏற்றதாக இருக்கும் என்பதை இங்கு காணலாம்.
POCO C50 வெளிப்புறம்:
POCO C50 பின்புறத்தில் தோல் போன்ற பிளாஸ்டிக் தன்மையில் வருகிறது. எடை குறைவானது (192 கிராம்) மற்றும் மற்ற ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடும்போது வழக்கமான பெரிய அளவாக இருக்கிறது. மலிவு விலையில் பெரிய டிஸ்பளே வழங்கியுள்ளது. பின்புறம் கைரேகை சென்சார், வலதுபுறத்தில் பவர் மற்றும் வால்யூம் பட்டன்கள் உள்ளன. இடதுபுறத்தில், ஒரு சிம் ஸ்லாட் உள்ளது, கீழே மைக்ரோ USB போர்ட் மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் உள்ளன.
POCO C50 டிஸ்ப்ளே:
POCO C50 ஆனது 6.52-இன்ச் HD+ டிஸ்ப்ளே (720 x 1600 பிக்சல்கள்) உடன் வருகிறது. மிகவும் துல்லியமான, பிரகாசமான அல்லது துடிப்பான டிஸ்ப்ளே இல்லை. ஆனால், ரூ. 10,000 முதல் ரூ. 12,000 வரை விற்பனையாகும் ஸ்மார்ட்போனுடன் கூட இந்தச் சாதனத்தை ஒப்பிட முடியாது. எனவே, இது வெறும் குறைந்த விலைக்கு ஏற்றாற் போல் மட்டுமே டிஸ்ப்ளே உள்ளது. அதாவது, மலிவான விலையில் ஏதாவது ஒன்றை வழங்க POCO முயற்சி செய்துள்ளது.
POCO C50 சிப்செட், பேட்டரி மற்றும் பிற விவரங்கள்
POCO C50 ஆனது 12nm MediaTek Helio A22 SoC பிராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இது ஆண்ட்ராய்டு 12 Go பதிப்பில் இயங்குகிறது . 10W சார்ஜிங், 5000mAh பேட்டரியுடன் வருகிறது. எனவே மெதுவாகத் தான் சார்ஜ் ஏறும். ஆனால் ஆண்ட்ராய்டு 12 Go பதிப்பு இருப்பதால் விளம்பரங்கள் பெரிய அளவில் இருக்காது. புளூடூத் 5.0, Wi-Fi 2.4 GHz ,GPS, AGPS, GLONASS, BeiDou அம்சங்கள் உள்ளன. கைரேகை சென்சார் நன்றாக வேலை செய்கிறது, மேலும் ஃபேஸ் அன்லாக் என்பது இல்லை.
POCO C50 கேமரா:
POCO C50 பின்புறத்தில் இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. முதன்மை கேமரா 8MP AI சென்சார் ஆகும், மேலும் டெப்த் சென்சாரும் உள்ளது. நீங்கள் 1080p 30fps வரை வீடியோக்களை பதிவு செய்யலாம், முன்புறத்தில் 5MP சென்சார் உள்ளது. இதில் எடுக்கப்பட்ட படங்கள் நேர்மையாக, எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருப்பதாக கூறப்படுகிறது.
POCO C50 விலை
POCO C50 இரண்டு மெமரி வகைகளில் கிடைக்கும் - 2ஜிபி+32ஜிபி மற்றும் 3ஜிபி+32ஜிபி ஆகும். இதன் விலை வீதம் முறையே ரூ.6249 மற்றும் ரூ.6999 ஆகும்.. ஜனவரி 10, 2023 முதல், இந்தியாவில் உள்ள பிளிப்கார்ட்டில் பயனர்கள் இதை வாங்க முடியும்.