இன்னும் ஒருசில நாளில் Oppo Reno 8T அறிமுகம்.. 108 மெகா பிக்சல் கேமரா!

ஒப்போ நிறுவனம் புதிதா தயாரித்துள்ள ஒப்போ ரெனோ 8T ஸ்மார்ட்போனை இந்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இதில் என்னெனன் சிறப்பம்சங்கள் இருக்கலாம் என்பது குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.

Oppo Reno 8T with 108MP camera confirmed to launch in India this week, ranbir kapoor selfie video revealed, check details here

ஸ்லிம் வகை ஸ்மார்ட்போன் தயாரிப்பில் ஒப்போ நிறுவனம் தனித்துவம் பெற்றது. இந்நிறுவனம் தற்போது புதிதாக Oppo Reno 8T 5G என்ற ஸ்மார்ட்போனை தயாரித்துள்ளது. இது இந்தியாவில் பிப்ரவரி 3 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இது தொடர்பாக ஒப்போ நிறுவனம் வெளியிட்டுள்ள விளம்பரங்களின்படி, Flipkart மற்றும் Oppo ஸ்டோர்களில்  Oppo Reno விற்பனைக்கு வருகிறது. 

Oppo Reno 8T ஆனது Oppo Reno 8 Pro இன் டோன்ட்-டவுன் பதிப்பாகத் தான் தெரிகிறது. 120Hz ரெப்ரெஷ் ரேட், 6.7-இன்ச் வளைந்த AMOLED டிஸ்ப்ளே, மெலிதான பெசல்கள், அதற்கு ஏற்ப பஞ்ச் ஹோல் ஆகிய வடிவமைப்புடன் வருகிறது. ஒப்போவின் அதிகாரப்பூர்வ தளத்தில், இந்த Oppo Reno 8T டிசைன் வெளிப்படுத்தப்பட்டுள்ளது  ஒப்போ ரெனோ 8 சீரிஸில் நாம் பார்த்த யூனிபாடி டிசைனில் இருந்து இது கணிசமாக வேறுபட்டது. 

Oppo Reno 8T 108 மெகாபிக்சல் முதன்மை கேமராவைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், 67W SuperVOOC சூப்பர் சார்ஜிங் தொழில்நுட்பம், 4,800mAh சக்தி கொண்ட பேட்டரி உள்ளது. இதனால் வெறும் 15 நிமிட சார்ஜிங் மூலம் 9 மணிநேர வீடியோவை ஸ்ட்ரீம் செய்யும் அளவுக்கு திறன் இருப்பதாக தெரிகிறது.

வருகிறது Coca Cola ஸ்மார்ட்போன்! அதிகாரப்பூர்வமாக உறுதி, ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!!

இதற்கிடையில், Reno 8T 5G இன் விளம்பரத்திற்காக பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருடன் Oppo கைகோார்த்து. கடந்த வாரம் ரன்பீர் கபூர் தனது ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுத்த போது, அந்த ரசிகரின் ஸ்மார்ட்போனை வீசிய வீடியோ வைரலானது. இந்த வீடியோ ட்விட்டரில் "ஆங்கிரி ரன்பீர் கபூர்" என்ற ஹேஷ்டேக்குடன் டிரெண்ட் ஆனது. அந்த சூழலின் உண்மையான வீடியோவை தற்போது ஒப்போ வெளியிட்டுள்ளது. அதன்படி, இது ரன்பீர் கபூர் அந்த ரசிகருக்கு புதிய Reno 8T 5G ஐ பரிசாக வழங்குவதுடன் முடிகிறது. விளம்பரத்தில் வீசப்பட்ட போன் போகோ ஸ்மார்ட்போன் என்று கூறப்படுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios