Asianet News TamilAsianet News Tamil

OPPO F27 Pro+ 5G: மழையிலும் தாக்குப்பிடிக்கும் வாட்டர் ப்ரூஃப் தொழில்நுட்பத்துடன் புதிய ஓப்போ ஸ்மார்டபோன்!

ஓப்போ நிறுவனத்தின் சமீபத்திய மொபைலான OPPO F27 Pro+ 5G, வாட்டர் ப்ரூஃப் தொழில்நுட்பத்தில் கேம்-சேஞ்சராக உருவாகி இருக்கிறது. இது ஈரமான சூழலையும் தாங்கும் திறன் கொண்டது. இது "இந்தியாவில் மழைக்காலத்துக்கு ஏற்ற முதல் ஃபோன்" என்ற பெருமைப் பெறுகிறது.

OPPO F27 Pro+ 5G: The New Monsoon-Ready Phone Taking Waterproof Tech to The Next Level sgb
Author
First Published Jun 20, 2024, 9:40 PM IST

இந்தியாவின் போட்டித்திறன் வாய்ந்த ஸ்மார்ட்போன் சந்தையில், தொடர்ந்து தன்னைத்தானே மிஞ்சும் ஒரு பிராண்ட் OPPO ஆகும். ஒவ்வொரு வெளியீட்டின் போதும், ஒரு புதிய ஆச்சரியத்தை அறிமுகப்படுத்துகிறது. பிரபலமான அம்சமாக இருந்தாலும் சரி, தொழில்நுட்ப முன்னேற்றமாக இருந்தாலும் சரி.

இப்போது OPPO பருவமழை குறித்து கவனம் செலுத்துகிறது. சமீபத்திய Cashify அறிக்கையில், 2021ஆம் ஆண்டில் மட்டும், இந்தியாவில் பருவமழையின்போது தண்ணீரால் ஏற்படும் சேதம் காரணமாக ஸ்மார்ட்போன் பழுதுபார்ப்பு 35% அதிகரித்துள்ளது எனக் கூறப்படுகிறது. ஐஐடியின் மற்றொரு அறிக்கை, மழைக்காலத்தில் சுமார் 30% ஸ்மார்ட்போன்கள் சேதங்களுக்கு உள்ளாகின்றன என்கிறது. இது மதர்போர்டு, டிஸ்ப்ளே மற்றும் பேட்டரி போன்ற முக்கியமான கூறுகளை பாதிக்கிறது.

OPPO இன் சமீபத்திய மொபைலான OPPO F27 Pro+ 5G, வாட்டர் ப்ரூஃப் தொழில்நுட்பத்தில் கேம்-சேஞ்சராக உருவாகி இருக்கிறது. இது ஈரமான சூழலையும் தாங்கும் திறன் கொண்டது. இதனால்தான், OPPO F27 Pro+ 5G "இந்தியாவில் மழைக்காலத்துக்கு ஏற்ற முதல் ஃபோன்" என்ற பெருமைப் பெறுகிறது. IP69 வாட்டர் ப்ரூஃப் ரேட்டிங் பெற்ற OPPO F27 Pro+ 5G ஸ்மார்ட்போன் சேதமடையாத 360° ஆர்மர் பாடி, அல்ட்ரா டஃப் 3D AMOLED டிஸ்பிளே கொண்ட திடமான சாதனம்.

பருவமழையைத் தாங்கும் தொழில்நுட்பம்:

OPPO F27 Pro+ 5G ஐ அதன் போட்டியாளர்களிடமிருந்து வேறுபடுத்தும் தனித்துவமான அம்சம் அதன் நீர்-எதிர்ப்பு தொழில்நுட்பமாகும். மான்சூன்-ரெடி ஃபோனாக வடிவமைக்கப்பட்ட இந்த மொபைல் வாட்டர் ப்ரூஃப் திறனுக்கான IP66, IP68 மற்றும் IP69 ரேங்டிங்குகளைப் பெற்றுள்ளது. IP68 ரேட்டிங் 30 நிமிடங்களுக்கு 1.5 மீட்டர் வரை தூசி மற்றும் நீரில் இருந்து பாதுகாக்கிறது, அதே சமயம் மேம்படுத்தப்பட்ட IP66 மற்றும் IP69 ரேட்டிங்குகள் தூசி நுழைவதைத் தடுப்பது மட்டுமின்றி, உயர் அழுத்த, உயர் வெப்பநிலை வாட்டர்ஜெட்களையும் தாக்கப்பிடித்துப் பாதுகாக்கிறது.

இந்த ஆல்ரவுண்ட் வாட்டர் ப்ரூஃப் ஸ்மார்ட்போன் மேம்பட்ட அம்சங்களுடன் வெளியாகிறது. இது உயர்தர வெப்ப-எதிர்ப்பு பசை, புதிய வாட்டர் ப்ரூஃப் சர்க்யூட், சிலிகான் சீல் ரிங் போன்றவற்றைப் பயன்படுத்துகிறது. ஸ்கிரீன், USB போர்ட், சிம் கார்டு ஸ்லாட் பின்ஹோல், மைக்ரோஃபோன், ஸ்பீக்கர் மற்றும் இயர்பீஸ் ஸ்பீக்கர் போன்ற பகுதிகள் பாதிக்கப்படாமல் இருக்க சிறப்பு கவனம் கொடுக்கப்பட்டுள்ளது.

OPPO F27 Pro+ 5G: The New Monsoon-Ready Phone Taking Waterproof Tech to The Next Level sgb

நீடித்து உழைக்கும் சாம்பியன்:

360° ஆர்மர் பாடி, நீர் சொட்டுகள் மற்றும் கீரல்களால் பாதிப்பு அடையாமல் இருப்பதை உறுதிசெய்கிறது. கீழே தவறி விழுந்தாலும் பாதிப்பு ஏற்படாதவாறு நான்கு மூலைகளும் பேக் கவருடன் இணைக்கப்பட்டுள்ளது. மதர்போர்டில் முக்கிய பாகங்களைப் பாதுகாக்க அதிக வலிமையும் உயர் வெப்ப கடத்துத்திறனும் கொண்ட AM03 என்ற அலுமினியம் பயன்படுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக, உட்புறத்திலும் பாதுகாப்புக்காக ஸ்பாஞ்ச் போன்ற குஷனிங் பொருட்கள் நிரப்பப்பட்டுள்ளன.
OPPO ஸ்மார்ட்போன் கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இது MIL-STD-810H முறையில் 516.8 மிலிட்டரி லெவல் சோதனையில் தேர்ச்சி பெற்றுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் 42,000 மைக்ரோ டிராப் சோதனைகள் உட்பட, 150 க்கும் மேற்பட்ட கடுமையான சோதனைகளுக்கு உட்பட்டுள்ளது. சுவிஸ் SGS சோதனையில் தேர்ச்சி பெற்று, பிரீமியம் 5 ஸ்டார் டிராப் ரெசிஸ்டன்ஸ் சான்றிதழைப் பெற்றுள்ளது. ஸ்கிரீனில் கீறல் விழுவதைக் தவிர்க்க கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

ஆடம்பரமாகத் தோன்றும் வடிவமைப்பு:

நவீன தொழில்நுட்ப வசதிகள் இருந்தாலும், OPPO F27 Pro+ 5G நேர்த்தியான லைட்-வெயிட்டான வடிவமைப்பு கொண்ட ஸ்மார்ட்போனாக உள்ளது. வெறும் 7.89 மிமீ தடிமனும் 177 கிராம் எடையும் கொண்டது என்பதால் வசதியாக கையில் பிடித்துக்கொள்ள முடியும். வளைந்த 3D வடிவமைப்பு கொண்ட மூலைகள் மொபைலின் தோற்றத்தை மேலும் அழகுபடுத்துகிறது.
மேலும் ஆடம்பரமாகத் தோன்றும் வகையில், OPPO F27 Pro+ 5G மொபைல் உயர்தர எலாஸ்டிக் வேகன் லெதரைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதன் மீது இருக்கும் சிலோக்சேன் (siloxane) பூச்சு கரைகள் படிவதைத் தவிர்த்து பிரீமியம் லுக் நீடித்து இருக்கச் செய்கிறது.

முதன்முறையாக, F சீரிஸ் ஸ்மார்ட்போனில் ஃபிளாக்ஷிப் காஸ்மோஸ் ரிங் டிசைன் கொடுக்கப்பட்டுள்ளது. இது கேமரா அமைப்பின் நுட்பத்தை மேம்படுத்துகிறது. இந்த மொபைல் இரண்டு அற்புதமான வண்ணங்களில் கிடைக்கிறது. டஸ்க் பிங்க் நிறம் சூரிய அஸ்தமனத்தின் போது வானத்தின் நிறத்தைப் பிரதிபலிக்கிறது. மிட்நைட் நேவி நிறம் நிலவொளியில் கடல் அலைகளைத் தூண்டும் இரவு வானத்தின் அமைதியைக் கொண்டிருக்கிறது.

OPPO F27 Pro+ 5G: The New Monsoon-Ready Phone Taking Waterproof Tech to The Next Level sgb

வியப்பில் ஆழ்த்தும் டிஸ்பிளே:

6.7-இன்ச் அல்ட்ரா-டூரபிள் 3D கர்வ்டு டிஸ்பிளேவிற்கு கண்ணுக்கு உகந்த வசதியை வழங்குகிறது. 120Hz புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டுள்ளது. 5 மேம்பட்ட கண் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது பகலிலும் இரவிலும் திரை கண்ணுக்கு இனிமையான அனுபவத்தை வழங்கும். 93% அளவில் உள்ள திரை பரந்து விரிந்து காட்சி அனுபவத்தைக் கொடுக்கும். இதில் உள்ள 300% அல்ட்ரா வால்யூம் மோட் மூலம் அதிவேக ஆடியோ-விஷுவல் அனுபவம் கிடைக்கும்.
இந்த ஸ்மார்ட்போனில் உள்ள ஸ்பிளாஸ் டச் அல்காரிதம் உங்கள் கை ஈரமாக இருந்தாலும் கூட மொபைலை பயன்படுத்தும் வசதியை அளிக்கிறது.

அதிவேக பேட்டரி - 44 நிமிடங்களில் 100%:

OPPO F27 Pro+ 5G பேட்டரி நான்கு வருடம் நீடித்து உழைக்கக்கூடியது. இதில் உள்ள பெரிய 5,000mAh பேட்டரி OPPO நிறுவனத்தின் 67W SUPERVOOCTM ஃபிளாஷ் சார்ஜ் அம்சத்தைக் கொண்டுள்ளது. இதனால் இந்த ஸ்மார்ட்போனை 100% சார்ஜ் செய்ய 44 நிமிடங்கள் மட்டுமே எடுக்கும். மேலும் 20 நிமிடங்களில் 56% வரை சார்ஜ் செய்யலாம். எப்போது மொபைலை பயன்படுத்துவதில் தடையே இருக்காது.

AI சக்தியுடன் பிரமிக்க வைக்கும் புகைப்படங்கள்:

OPPO F27 Pro+ 5G ஸ்மார்ட்போன் 64MP பிரதான கேமரா, 2MP டெப்த் கேமரா மற்றும் 8MP செல்ஃபி கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேம்பட்ட அல்காரிதம்கள் இருப்பதால் இதில் 1X மற்றும் 2X ஜூம்களில் பிரமிக்க வைக்கும் புகைப்படங்களை எடுக்கலாம். ஃப்ளாஷ் ஸ்னாப்ஷாட் போன்ற AI அம்சத்தின் உதவியால் தெளிவான படங்கள் எடுப்பதற்கான தீர்வை வழங்குகிறது. குறைந்த ஒளியிலும் உயர்தரமான படங்களை எடுக்க முடியும். முன்பக்க கேமராவில் உள்ள AI போர்ட்ரெய்ட் ரீடச்சிங் அம்சம் அழகான செல்ஃபிகளை எடுக்க உதவுகிறது. AI எரேசர் அம்சத்தின் மூலம் போட்டோவின் பின்னணியில் உள்ள தேவையில்லாத பொருட்களை அகற்றலாம். AI ஸ்மார்ட் இமேஜ் மேட்டிங் போட்டோவை எடிட் செய்யும் வேலையை எளிதாக்குகிறது.

OPPO F27 Pro+ 5G: The New Monsoon-Ready Phone Taking Waterproof Tech to The Next Level sgb

விரைவான செயல்பாடுகளுக்கு ஏற்ற சுறுசுறுப்பான பிராசஸர்:

OPPO F27 Pro+ 5G ஸ்மார்டன்போன் 6nm செயல்முறை தொழில்நுட்பத்துடன் MediaTek Dimensity 7050 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. தினசரி பணிகள் மற்றும் கேமிங்கின்போது சீராக செயல்படக்கூடியது. அதே வேளையில் மின் நுகர்வைக் குறைத்து செயல்திறனை மேம்படுத்துகிறது. சரளமான செயல்பாட்டுக்கான 50 மாத உத்தரவாதமும் அளிக்கப்படுகிறது. எனவே உங்கள் மொபைல் வருடக்கணக்கில் வேகமாகவும் சிறப்பாகவும் இயங்கும். 8GB+128GB மற்றும் 8GB+256GB என இரண்டு வேரியண்ட்களிலும் இந்த மொபைல் கிடைக்கிறது.

புதுமைக்கு புதிய பெயர் ColorOS 14.0:

OPPO F27 Pro+ 5G ஸ்மார்ட்போன் ColorOS 14.0 உடன் வருகிறது. இது சில புதுமையான அம்சங்களைக் கொண்டுள்ளது. இதில் உள்ள சிறந்த அம்சங்களில் ஒன்று அக்வா டைனமிக்ஸ். இது பொதுவான இன்டர்ஆக்‌ஷன்களை பபிள், காப்ஸ்யூல், பேனல் என்ற வகைகளில் மறுவடிவமைப்பு செய்துள்ளது. ஃபைல் டாக் அம்சம் மூலம் எந்த அப்ளிகேஷனில் இருந்து தகவல்களை எளிமையாக ஷேர் செய்ய முடியும். பயனர்கள் வெவ்வேறு அப்ளிகேஷன்களுக்கு இடையேஃபைல்கள், படங்கள், டெஸ்ட் என எதையும் டிராக் அண்ட் டிராப் செய்யலாம்.

மழைக்காலத்திலும் அதற்கு பிறகும் உங்கள் நண்பன்:

புதிய OPPO F27 Pro+ 5G பகட்டான தோற்றத்துடன் ஒரு முழுமையான ஸ்மார்ட்போனாக உள்ளது. இது பருவமழையை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. IP66, IP68 மற்றும் IP69 ஆகிய வாட்டர் ப்ரூஃப் ரேட்டிங்கைப் பெற்றுள்ளது. புதுமையான 360° ஆர்மர் பாடி மற்றும் அல்ட்ரா டஃப் 3D கர்வ்டு AMOLED டிஸ்ப்ளே மூலம் பருவமழை காலத்தில் ஏற்படும் சவால்களை திறம்பட சமாளிக்கிறது. நீங்கள் மழைக்காலத்தை விரும்புபவராக இருந்தால், இந்த மொபைல் உங்களுக்கு சிறந்த நண்பனாக இருக்கும். இந்த மொபைலை ஈரமான கைகளால் கூட பயன்படுத்தலாம். அதற்கான அனைத்து வகையான பாதுகாப்பையும் வழங்கிறது. உங்கள் மொபைலை அப்கிரேட் செய்ய நினைத்தால், OPPO F27 Pro+ 5G மொபைலையே தேர்ந்தெடுக்கலாம்!
OPPO F27 Pro+ 5G: The New Monsoon-Ready Phone Taking Waterproof Tech to The Next Level sgb

விலை, ஆஃபர் எவ்வளவு?

OPPO F27 Pro+ 5G மொபைலின் 8GB+128GB வேரியண்ட் ரூ.27,999 மற்றும் 8GB+256GB வேரிண்ட் ரூ.29,999 விலையில் கிடைக்கும். இன்று முதல் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது. பிளிப்கார்ட், அமேசான் இணையதளங்களிலும் OPPO ஸ்டோர் உள்ளிட்ட பிரபல மொபைல் ஷோரூம்களிலும் கிடைக்கும்.

OPPO F27 Pro+ 5G கவர்ச்சிகரமான சலுகைகள்:

• இந்தியாவின் பருவமழைக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ள ஸ்மார்ட்போனை வாங்கியவர்கள், முதல் 180 நாட்களுக்குள் ஸ்கிரீன் பாதிப்பு ஏற்பட்டால், ரூ.999 மதிப்புள்ள ஸ்கிரீனை இலவசமாக மாற்றிக்கொள்ளலாம். இந்தச் சலுகை ஒருமுறை மட்டுமே கிடைக்கும்.

• 6 மாதங்கள் வரை வட்டி இல்லா தவணை முறையில் இந்த மொபைலை வாங்கலாம். மேலும் பஜாஜ் ஃபைனான்ஸ், டி.வி.எஸ். கிரெடிட் ஃபைனான்ஸ், ஐ.டி.ழஎஃப்.சி. ஃபர்ஸ்ட் பேங்க் மற்றும் ஹெ.டி.பி. ஃபைனான்சியல் சர்வீசஸ் போன்ற முன்னணி நிறுவனங்கள் மூலம் டவுன் பேமெண்ட் ஏதும் இல்லாமல் 9 மாதங்கள் வரை நுகர்வோர் கடன் பெற்றுக்கொள்ளலாம்.

• பழை மொபைலை எக்ஸ்சேஜ் செய்து OPPO F27 Pro+ மொபைலுக்கு அப்கிரேட் ஆக விரும்பினால் ரூ.1,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கும். ஏற்கெனவே OPPO மொபைல் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் கூடுதலாக ரூ.1000 மதிப்புள்ள லாயல்டி போனஸைப் பெறலாம்.

• ஹெச்.டி.எஃப்.சி., எஸ்.பி.ஐ. மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிகளில் இருந்து கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் வாங்கினால் 10% கூடுதல் கேஷ்பேக் சுலுகையும் கிடைக்கும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios