Asianet News TamilAsianet News Tamil

OPPO F27 5G: பிரமிக்க வைக்கும் Halo Light, AI அம்சங்களுடன் Oppo 5G மொபைல்!!

புத்துணர்ச்சியூட்டும் தனித்துவமான Halo Light ஆற்றலுடன் கூடிய நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் AI அம்சங்களின் தொகுப்புடன் புதிய OPPO F27 5G வெறும் ரூ.22,999 இல் இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது.

OPPO F27 5G: Stylish Cosmos Ring Design with enchanting Halo Light and AI features sgb
Author
First Published Aug 23, 2024, 4:12 PM IST | Last Updated Aug 23, 2024, 4:17 PM IST

எதிர்காலத்திற்கான ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத் திறனுடன் ஓப்போவின் நிறுவனத்தின் OPPO F27 5G மொபைல் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இந்த பிரீமியம் ஸ்மார்ட்போன் பிரமிக்க வைக்கும் வடிவமைப்பு, காஸ்மோஸ் ரிங் மற்றும் AI அம்சங்களுடன் தனித்து நிற்கிறது. நீர் மற்றும் தூசி எதிர்ப்பு திறனுக்கான IP64 சான்றும், SGS செயல்திறன் மல்டி-சீன் பாதுகாப்பு சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கும் பெற்றுள்ளது. கண்கவர் வடிவமைப்பு மற்றும் சிறந்த செயல்திறனுக்கு அப்பால், இதன் தனித்துவமான அம்சம் Halo Light. இது அன்றாட மொபைல் பயன்பாடுகளுக்கு ஏற்ப சிறப்பு லைட்டிங் எஃபெக்ட்களை அளிக்கிறது. மேலும், OPPO இந்த மொபைலில் கேமரா முதல் கனெக்டிவிட்டி வரை ஒவ்வொரு அம்சத்திலும் செயற்கை நுண்ணறிவு திறனை இணைத்துள்ளது. இதன் தனித்துவமான அம்சங்களை விரிவாகப் பார்க்கலாம்.

OPPO F27 5G: Stylish Cosmos Ring Design with enchanting Halo Light and AI features sgb

Cosmos Ring டிசைன் மற்றும் Halo Light:

OPPO F27 5G பற்றி கவனிக்கவேண்டிய முதல் விஷயம் கண்கவர் நிறமும் வடிவமைப்பும். இந்த மொபைல் Amber Orange மற்றும் Emerald green என இரண்டு துடிப்பான வண்ணங்களில் கிடைக்கிறது. மெல்லிய தோற்றம் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் வெறும் 187 கிராம் எடை கொண்டது. Emerald green 7.69 மிமீ மற்றும் Amber Orange 7.76 மிமீ தடிமன் கொண்டவை.

OPPO நிறுவனத்தின் தனித்துவமான வடிவமைப்பு F27 5G மொபைலிலும் பளிச்சிடுகிறது. இது காஸ்மோஸ் ரிங் டிசைனுடன் தொடங்குகிறது. கேமராவைச் சுற்றியுள்ள இந்த அழகிய டிசைன் மெக்கானிக்கல் வாட்ச் போன்ற முப்பரிமாண தோற்றத்தைக் கொண்டது. இது மொபைலுக்கு நேர்த்தியான பிரீமியம் லுக்கைக் கொடுக்கிறது.

காஸ்மோஸ் ரிங் வடிவமைப்புடன் புதிய Halo Light-டும் இந்த மொபைலின் ஸ்பெஷல் அம்சமாக உள்ளது. உங்கள் இசைக்கு பொருத்தமாக ஒத்திசைந்து, மியூசிக்கல் அனுபவத்தை மேம்படுத்துகிறது. விருப்பம் போல மாற்றி அமைக்கும் வசதியுடன் பல்வேறு லைட்டிங் அம்சங்கள் சார்ஜிங், நோட்டிஃபிகேஷன், போன் கால் மற்றும் கேமிங் என எதற்கும் பொருத்தமாக இருக்கும். உதாரணமாக, ஆன்லைன் மீட்டிங்கின் போது, Halo Light அம்சம் இடையூறு இல்லாமல் நோட்டிஃபிகேஷன் சமிக்ஞைகளைச் செய்கிறது. கேம் விளையாடத் தொடங்கும்போது, Halo Light வர்ணஜாலம் செய்து மாறுபட்ட காட்சி அனுபவத்தை உருவாக்குகிறது.

ஆர்மர் பாடி கட்டமைப்பு கொண்ட இந்த ஸ்மார்ட்போன், SGS செயல்திறன் மல்டி-சீன் பாதுகாப்பு சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங் தேர்ச்சி பெற்றுள்ளது. இது இந்த மொபைலுக்கு நீடித்து நிலைத்திருக்கும் உறுதியைக் கொடுக்கிறது. இத்துடன் நீர் மற்றும் தூசியைத் தாங்கும் IP64 மதிப்பீட்டையும் பெற்றிருக்கிறது.

OPPO F27 5G: Stylish Cosmos Ring Design with enchanting Halo Light and AI features sgb

Smart Adaptive Screen-னுடன் கிரிஸ்டல் க்ளியர் டிஸ்ப்ளே:

OPPO F27 5G ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் 120Hz ஸ்மார்ட் அடாப்டிவ் ஸ்கிரீனைக் கொண்டுள்ளது. இது தனித்துவமான பிரைட்னஸ் மற்றும் புதுப்பிப்பு வீதத்தை வழங்குகிறது. இதன் லோக்கல் அதிகபட்ச பிரைட்னஸ் 2100 நிட்ஸ் வரையும் ஒட்டுமொத்த பிரைட்னஸ் 1200 நிட்ஸ் வரையும் உள்ளது. இதில் உள்ள தானியங்கி AI பிரைட்னஸ் அம்சம் எந்த சூழ்நிலையிலும் டிஸ்பிளே தெளிவாக இருப்பதை உறுதிசெய்கிறது. இதனால் சூரிய ஒளியிலும் மொபைலை வழக்கம்போல பயன்படுத்த முடியும். இதில் இருக்கும் ஸ்பிளாஸ் டச் அல்காரிதம் உங்கள் கைகள் ஈரமாக இருந்தாலும் ஸ்கிரீன் தொடுதலை துல்லியமாக உணர்ந்து செயல்பட வைக்கிறது.

மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் கண்களைப் பாதுகாக்கும் Smart Eye Protection. இது மொபைலை நீண்ட நேரம் பயன்படுத்தும்போது கண் பாதுகாப்பை மேம்படுத்துகிறது. இது டிஸ்பிளேயில் தீங்கு விளைவிக்கும் நீல ஒளி உமிழ்வைக் குறைக்கிறது. நேரத்திற்கு ஏற்ப திரையின் வெப்பநிலையைச் சரிசெய்துகொள்கிறது. நாள் முழுவதும் கண்ணுக்கு ஏற்ற திரையை வழங்குவதோடு இரவு ஆழ்ந்த உறக்கத்தைப் பெறவும் உதவுகிறது.

OPPO F27 5G: Stylish Cosmos Ring Design with enchanting Halo Light and AI features sgb

பாக்கெட்டில் பார்ட்டி:

இந்த போனின் ஆடியோவில் OPPO பாராட்டத்தக்க மேம்பாடுகளைச் செய்துள்ளது. இதில் உள்ள halo ஆடியோ, வெவ்வேறு ஆடியோ மூலங்களைப் பிரிப்பதன் மூலம் அதிவேக ஒலி அனுபவத்தை உருவாக்குகிறது. இந்த மேம்பட்ட அம்சம் இசை, அழைப்புகள் மற்றும் நேவிகேஷன் ஆகியவை ஒன்றுடன் ஒன்று குழம்பாமல் பார்த்துக்கொள்கிறது.

OPPO F27 5G மொபைல் அதிவேகமான ஆடியோ அனுபவத்திற்கான டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது. அல்ட்ரா வால்யூம் மோட் மூலம் ஒலியின் அளவை 300% வரை அதிகரிக்கலாம்.

இசை மற்றும் பார்ட்டி பிரியர்களுக்காக, OPPO இந்த மொபைலில் மியூசிக் பார்ட்டி அப்ளிகேஷனைச் சேர்த்துள்ளது. இந்த ஆப் மூலம் பயனர்கள் ஒரு க்யூ.ஆர். குறியீட்டை ஸ்கேன் செய்து தங்கள் மொபைல் போன்களை ஒரே நெட்வொர்க்கில் இணைக்க முடியும்.

OPPO F27 5G: Stylish Cosmos Ring Design with enchanting Halo Light and AI features sgb

அல்ட்ரா-கிளியர் படங்களுக்கான AI கேமரா:

OPPO F27 5G இல் உள்ள கேமரா அமைப்பு பிரமிக்க வைக்கும் படங்களை எடுக்கும் AI சக்தியைப் பெற்றுள்ளது. 50MP பிரதான கேமரா மிகத் தெளிவான படங்களை வழங்குகிறது. அதே நேரத்தில் OV02B1B 1/5" சென்சாரும் f/2.4 அப்ரெச்சர் கொண்ட 2MP போர்ட்ரெய்ட் கேமராவும் ஒவ்வொரு காட்சியிலும் சிறந்த டீடெய்ல்ஸ் கிடைப்பதை உறுதி செய்கிறது. ப்ரோ போர்ட்ரெய்ட் மோட் (Pro Portrait Mode) 2MP போர்ட்ரெய்ட் கேமராவுடன் பிரதான கேமராவை இணைக்கிறது. இது படங்களுக்கு இயற்கையான பொக்கே எஃபெக்ட்டைக் கொடுக்கிறது.

32எம்பி செல்ஃபி கேமரா மில்டி ஃபோகல் லென்த் (0.8x, 1x) கொண்டது. இது AI போர்ட்ரெய்ட் ரீடச்சிங் மூலம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் நேச்சுரல் டோன் அம்சம் படங்களில் உள்ள விஷுவல் அம்சங்களை அடையாளம் காணுதல். எக்ஸ்போஷரை துல்லியமாக சரிசெய்தல், ஸ்கின்டோன்களை நேர்த்தியாக்குதல் ஆகியவற்றை உறுதி செய்கிறது.

இதில் உள்ள மற்றொரு தனித்துவமான அம்சம் AI எரேசர் 2.0. இது படங்களிலிருந்து தேவையற்ற விஷயங்களை சிரமமின்றி நீக்குகிறது. லட்சக்கணக்கான படங்களைக் கொண்டு பயிற்சி பெற்ற, இதன் டிஃப்யூஷன் மாடல் 98% துல்லியம் கொண்டது. இது படத்தில் உள்ள குறைகளை அடையாளம் கண்டு நீக்குதல், நீக்கப்பட்ட இடத்தை இயல்பாகவும் பொருத்தமாகவும் நிரப்புதல் ஆகியவற்றை தொழில்முறை எடிட்டிங் சாஃப்ட்வேரின் துல்லியத்துடன் செய்கிறது.

OPPO F27 5G: Stylish Cosmos Ring Design with enchanting Halo Light and AI features sgb

OPPO F27 5G மொபைலில் உள்ள AI ஸ்டூடியோ மூலம் போட்டோவை டிஜிட்டல் அவதாராக மாற்ற முடியும். இது சுயவிவரப் படங்களை உருவாக்குவதற்கு சிறந்த ஆப்ஷனாக இருக்கும். இதில் OPPO மேலும் இரண்டு தனித்துவமான தீம்களை அறிமுகப்படுத்தியுள்ளது. டிஸ்கோ பார்ட்டி தீம் பார்ட்டி அம்சங்களைக் கொண்டது. டிரெடிஷனல் க்ளோ தீம் ரெட்ரோ எஃபெக்ட்டைக் கொடுக்கிறது.

AI ஸ்மார்ட் இமேஜ் மேட்டிங் 2.0 ஒரு புகைப்படத்தில் இருந்து சப்ஜெக்ட்டை துல்லியமாக தனித்துக் காட்டுகிறது. குழு புகைப்படத்தில் மூன்று சப்ஜெக்டுகள் வரை அடையாளம் காணும் திறமை கொண்டது. விலங்குகளின் ரோமங்கள் போன்ற சிக்கலான அம்சங்களையும் துல்லியமாகக் கண்டறியும் திறமையைப் பெற்றுள்ளது. இந்த கட்-அவுட்களை ஸ்டிக்கர்களாகவும் மாற்றிக்கொள்ள முடியும்.

அனைத்தையும் எளிமையாக்கும் AI அம்சங்கள்:

OPPO F27 5G இல் உள்ள GenAI வெற லெவல் செயல்திறனைக் கொண்டுள்ளது. மொபைலின் சைடு பாரில் AI டூல் பாக்ஸ் ஒன்று உள்ளது. இது உங்கள் தேவைக்கு ஏற்ப AI அம்சங்களைப் பரிந்துரை செய்யும்.

சமூக ஊடகங்களில் பதிவுகள் எழுதும்போது AI ரைட்டர் டூல் பரிந்துரைகளை வழங்குகிறது. AI சம்மரி டூல் நீளமான டெக்ஸ்டில் முக்கியமான அம்சங்களை சுருக்கமாகத் தருகிறது. AI ஸ்பீக் டூல் எழுத்தை குரலாக மாற்றுவதற்குப் பயன்படுத்துகிறது.

AI ரெக்கார்டிங் சம்மரி டூல் ரெக்கார்டிங்ஸ் செயலியில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இது பதிவுசெய்யப்பட்ட ஆடியோவில் இருந்து சுருக்கக் குறிப்புகளை தொகுத்து நோட்ஸ் செயலிக்கு அனுப்புகிறது.

OPPO F27 5G: Stylish Cosmos Ring Design with enchanting Halo Light and AI features sgb

எப்போது தடையற்ற இணைப்பு:

OPPO F27 5G ஸ்மார்ட்போனில் ஓப்போ அற்புதமான நெட்வொர்க் அம்சங்களைக் அறிமுகப்படுத்தி இருக்கிறது. 360 டிகிரி சரவுண்ட் ஆண்டெனா அதிர்வெண் பட்டைகளை அனைத்து திசைகளிலும் பரவச் செய்து தடையற்ற தகவல்தொடர்பை உறுதி செய்கிறது. AI அல்காரிதம் இணைப்பை மேலும் வலுவாக்குகிறது. இது ஆண்டெனா மாற்றங்கள் மூலம் எல்லா நேரங்களிலும் சிக்னல் கிடைக்க உதவுகிறது.

OPPO இந்த ஸ்மார்ட்போனில் கொடுத்திருக்கும் AI LinkBoost அம்சம் 360-டிகிரி ஆண்டெனாவுடன், சிஸ்டம்-லெவல் AI மாதிரியைப் பயன்படுத்தி சிக்னல் ரிசெப்ஷனை மேம்படுத்துகிறது. இது வீடியோ பகிர்வு வேகத்தை 12% அதிகரிக்கிறது. வீடியோ பஃபரிங் நேரத்தை 17% குறைக்கிறது. போனில் பேசிக்கொண்டே வீடியோ ஸ்ட்ரீமிங் செய்யும்போது பஃபரிங் நேரத்தை 72% வரை குறைக்கிறது.

நெட்வொர்க் கவரேஜ் இல்லாத பகுதிகளில் இணைப்பு கிடைக்க BeaconLink அம்சம் உள்ளது. புளூடூத் ஹார்டுவேரின் திறனை அதிகரிப்பதன் மூலம், ப்ளூடூத் வழியாக 200 மீட்டர் தூரத்திற்கு தரவுகளை அனுப்பி வாய்ஸ் அழைப்புகளை எளிமை ஆக்குகிறது.

OPPO F27 5G: Stylish Cosmos Ring Design with enchanting Halo Light and AI features sgb

இணையற்ற செயல்திறன், புதுமையான அப்கிரேடு:

OPPO F27 5G மொபைலில் மீடியாடெக் (MediaTek Dimensity 6300) பிராசஸர் உள்ளது. 6nm செயல்பாட்டில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த சிப்செட், ஆற்றல் செயல்திறனில் 10% ஒட்டுமொத்த முன்னேற்றத்தையும், கேமிங்கிற்கான GPU செயல்திறனில் 13% ஊக்கத்தையும், ஹெவி-லோட் பவர் ஆப்டிமைசேஷனில் 11% மேம்பாட்டையும் கொண்டுள்ளது. 8GB RAM மற்றும் 128 GB / 256GB ஸ்டோரேஜ் கொண்டிருக்கிறது. OPPO வின் ரேம் விரிவாக்க தொழில்நுட்பம், பயன்படுத்தப்படாத ஸ்டோரேஜை வெர்சுவல் RAM ஆக மாற்றி, செயல்திறனை மேம்படுத்துகிறது. இது வீடியோ அல்லது கேம் ஸ்ட்ரீமிங் செய்யும்போதும் சிறப்பான அனுபவத்தை உறுதி செய்கிறது. இந்த மொபைல் OPPO வின் 50-மாத ஃப்ளூன்சி பாதுகாப்பு சோதனையில் தேர்ச்சி பெற்றுள்ளது. இதனால், நான்கு ஆண்டுகளுக்கும் மேல் நீடித்து உழைக்கும் சீரான செயல்திறனுக்கு உத்தரவாதம் உள்ளது.

OPPO தனது டிரினிட்டி எஞ்சினையும் இந்த மொபைலில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த டிரினிட்டி எஞ்சின், ஒட்டுமொத்த செயல்திறனை அதிகரிக்க உதவுகிறது.

OPPO F27 5G: Stylish Cosmos Ring Design with enchanting Halo Light and AI features sgb

வெறும் 71 நிமிடங்களில் ஃபுல் சார்ஜ்!:

இந்த மொபைல் 45W SUPERVOOC ஃபிளாஷ் சார்ஜ் அம்சத்துடன் 5,000mAh பேட்டரியைப் பெற்றுள்ளது. OPPO வின் தனித்துவமான சார்ஜிங் சிஸ்டம் 71 நிமிடங்களில் 100% சார்ஜ் செய்வதை உறுதிப்படுத்துகிறது. இந்த பேட்டரி சாதாரணமான அன்றாட பயன்பாட்டில் கிட்டத்தட்ட 2 நாட்கள் நீடிக்கும். இதுவே ஸ்டாண்ட்-பை நிலையில் 21 நாட்கள் வரை சார்ஜ் இருக்கும். நீண்ட லைஃப் கொண்ட இதன் பேட்டரி நான்கு ஆண்டுகளுக்கு மேல் சிறப்பாக செயல்படும்.

OPPO F27 5G: Stylish Cosmos Ring Design with enchanting Halo Light and AI features sgb

வேறு எங்கும் கிடைக்காத விலை:

OPPO F27 5G கண்களைக் கவரும் வடிவமைப்பு கொண்ட பிரீமியம் ஸ்மார்ட்போன். Cosmos Ring, Halo light ஆகியவை கவனத்தை ஈர்க்கும் அம்சங்களாக உள்ளன. Amber Orange மற்றும் Emerald green ஆகிய அழகான பிரமிக்க வைக்கும் வண்ணங்களில் கிடைக்கின்றன. மியூசிக் பார்ட்டி ஆப் நண்பர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும். இந்த அம்சம் அவர்களின் மொபைலை ஒருங்கிணைத்து ஒரே நேரத்தில் ஒரே பாடலை இசைக்க அனுமதிக்கிறது. Halo light மற்றும் 300% அல்ட்ரா வால்யூம் ஆகியவை மறக்க முடியாத இசை அனுபவத்தைக் கொடுக்கின்றன. மில்டி ஃபோக்கல் லென்த் கொண்ட கொண்ட 32MP செல்ஃபி கேமராவில், AI போர்ட்ரெய்ட் ரீடச்சிங் அம்சத்துடன் தெளிவான படங்களை எடுக்க முடியும். 6.67-இன்ச் 120 ஹெர்ட்ஸ் Smart Adaptive Screen தனித்துவமான பிரகாசம் மற்றும் அதிவேகமான டிஸ்ப்ளே அனுபவத்தை வழங்கும். இதன் சூப்பர் ஸ்மூத் ரெஃப்ரெஷ் ரேட்டும் முக்கிய அம்சமாக உள்ளது. இந்த விலைப் பிரிவில் அதிகபட்ச AI அம்சங்களுடன் கிடைக்கிறது.

OPPO F27 5G: Stylish Cosmos Ring Design with enchanting Halo Light and AI features sgb

OPPO F27 5G 8GB+128GB வேரியண்ட்டின் விலை ரூ.22,999, 8GB+256GB வேரியண்ட்டின் விலை ரூ.24,999. ஏற்கனவே விற்பனைக்கு வந்துவிட்ட இந்த ஸ்மார்ட்போன், Flipkart, Amazon மற்றும் OPPO e-Store களில் கிடைக்கும். ஆஃப்லைனிலும் மொபைல் ஷோரூம்களில் கிடைக்கும். இந்த மொபைலை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறப்புச் சலுகைகளும் உள்ளன.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios