நார்டு போன் பயன்படுத்துவோருக்கு குட் நியூஸ் சொன்ன ஒன்பிளஸ்... என்னனு தெரியுமா?

இந்த அப்டேட் ஸ்மார்ட்போனில் ஸ்மார்ட் பேட்டரி என்ஜின் வழங்கி இருக்கிறது. இது ஸ்மார்ட்போனின் பேட்டரி ஆயுளை மேம்படுத்தும்.

 

OnePlus Nord Starts Receiving Stable Android 12-Based OxygenOS 12 Update in India

ஒன்பிளஸ் நிறுவனத்தின் நார்டு ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ஆக்சிஜன் ஓ.எஸ். 12 அப்டேட் வழங்கப்பட்டு வருகிறது. ஓவர் தி ஏர் முறையில் வழங்கப்படும் இந்த அப்டேட் இந்திய யூனிட்களுக்கு கிடைக்கிறது. இந்தியாவை அடுத்து ஐரோப்பாவுக்கான ஆண்ட்ராய்டு 12 அப்டேட் உருவாக்கப்பட்டு வருவதாக ஒன்பிளஸ் அறிவித்து இருக்கிறது. விரைவில் இந்த அப்டேட் வெளியிடப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.

புதிய ஓ.எஸ். அப்டேட் உடன் ஏப்ரல் 2022 மாதத்துக்கான ஆண்ட்ராய்டு செக்யூரிட்டி பேட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அப்டேட் ஸ்மார்ட்போனில் இருந்து வந்த ஏராளமான பிழைகளை சரி செய்து, ஸ்மார்ட்போனின் செயல்திறனை மேம்படுத்தி உள்ளது. இத்துடன் ஏராளமான புது அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக மே 13 ஆம் தேதி இதே அப்டேட் தேர்வு செய்யப்பட்ட சில பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த அப்டேட் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

புது ஆண்ட்ராய்டு அப்டேட்:

ஸ்டேபில் அப்டேட் வெளியிடப்பட்டு இருக்கும் நிலையில், முன்னதாக ஆக்சிஜன் ஓ.எஸ். 12 ஓபன் பீட்டா வடிவில் வழங்கப்பட்டு இருந்தது. புது ஓ.எஸ். அப்டேட் வெளியீடு பற்றி ஒன்பிளஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் குறிப்பிட்டு இருக்கிறது. ஜூலை 2020 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 சார்ந்த ஆக்சிஜன் ஓ.எஸ். 10.5 கொண்டிருந்தது. 

இந்த நிலையில், புது அப்டேட் மூலம் நார்டு ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 12 அப்டேட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அப்டேட் ஸ்மார்ட்போனில் ஸ்மார்ட் பேட்டரி என்ஜின் வழங்கி இருக்கிறது. இது ஸ்மார்ட்போனின் பேட்டரி ஆயுளை மேம்படுத்தும். இத்துடன் புது டெக்ஸ்ச்சர்கள் மூலம் டெஸ்க்டாப் ஐகான்கள் ஆப்டிமைஸ் செய்யப்பட்டு உள்ளன. டார்க் மோட் தற்போது பல்வேறு லெவல்களில் அட்ஜஸ்ட் செய்யும் வசதியை பெற்று இருக்கிறது.

புது அம்சங்கள்:

இவற்றுடன் வொர்க்லைஃப் பேலன்ஸ் எனும் புது அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் பயனர்களின் வொர்க்/லைஃப் மோட்கள் இடையே தானாக ஸ்விட்ச் செய்து கொள்ளும். இது ஸ்மார்ட்போன் இருக்கும் லொகேஷன், வைபை நெட்வொர்க் மற்றும் நேரம் உள்ளிட்டவைகளுக்கு ஏற்ப மேற்கொள்ளப்படுகிறது. அதாவது பயனர் அலுவலகத்தில் இருந்தால், ஸ்மார்ட்போன் வொர்க் மோடிலும், வீட்டில் இருந்தால் லைஃப் மோடிற்கும் மாறிக் கொள்ளும். 

இவை மட்டும் இன்றி கேமிங் செய்வோருக்கு ஏற்ற வகையில் ஹைப்பர்பூஸ்ட் பிரேம் ரேட் ஸ்டேபிலைசர் மற்றும் வாய்ஸ் எபெக்ட் பிரீவியூ அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் கேலரியும் புது லே-அவுட் பெற்று இருக்கிறது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios