OnePlus 11 5G எப்படி இருக்கு? நீடித்து உழைக்குமா? இதோ முழு விவரங்கள்!
அண்மையில் OnePlus 11 5G ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனின் செயல்திறன் எப்படி உள்ளது? செயல்திறன் எந்த அளவுக்கு உள்ளது என்பது குறித்த முழுமையான விவரங்களையும், சிறப்பம்சங்களையும் இங்குக் காணலாம்.
நீங்கள் ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்கும்போது, அது நீடித்திருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். உங்கள் ஸ்மார்ட்போன் உங்கள் வாழ்க்கையின் இன்றியமையாத பகுதியாகும், ஆனால் தொடர்ந்து பயன்படுத்தினால் உங்கள் போனின் ஆயுட்காலம் பாதிக்கப்படும். துரதிர்ஷ்டவசமாக, இப்போதெல்லாம், பெரும்பாலான போன்கள் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு மேல் நீடிக்காது.
உங்கள் ஃபோனை நன்றாகக் கவனித்துக்கொண்டால் நீண்ட காலம் உழைக்கும் என்றாலும், மூன்று வருடம் கடந்துவிட்டால், உங்கள் ஃபோனின் செயல்திறன் குறைவதை நீங்கள் உணரலாம். பொதுவாக இந்த கட்டத்தில்தான் உங்கள் வன்பொருள் காலாவதியாகிறது, பேட்டரி குறையத் தொடங்குகிறது.
OnePlus நிறுவனத்தின் புத்தம் புதிய OnePlus 11 5G ஸ்மார்ட்போனானது ஒரு கேம் சேஞ்சர் ஆகும். ஃபோனின் ஆயுளை அதிகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட சமீபத்திய வன்பொருள் முதல் புதுப்பிக்கப்பட்ட மென்பொருள் வரை அனைத்திலும் இது தேர்ந்துள்ளது.
OnePlus 11 5G ஸ்மார்போனானது வேகமாகவும் நீடித்ததாகவும் மாற்றக்கூடிய நீட்டிக்கப்பட்ட செயலிகள், உயர்தர ஹார்ட்வேர்களுடன் வருகிறது. இது LPDDR5X, UFS 4.0, அதிகளவு 16GB ரேம் கொண்டுள்ளது, இது சக்திவாய்ந்த செயல்திறன், சிறந்த ஆற்றல் திறன் இருப்பதை உறுதி செய்கிறது. இப்போது எந்த வேலையானாலும் எளிமையாக செய்து முடிக்கலாம்.
அதாவது, LPDDR5X DRAM ஆனது 33% வரை வேகமானது, 20% அதிக திறன் கொண்டது. இதற்கு முன்பு வந்த ரேம்களை காட்டிலும் 30% பரந்த செயல்திறனை வழங்குகிறது, ஸ்மார்ட்போனின் நீண்ட ஆயுட்காலத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் ஹார்ட்வேர், 5000 mAh சக்தி கொண்ட பேட்டரி ஆகியவை இருப்பதால், ஒரு முறை சார்ஜ் செய்தாலே நீண்ட நேரம் நீடித்து உழைக்கும். மேலும், விரைவான சார்ஜ் தேவைப்படும்போது, 100W SUPERVOOC சார்ஜர், ஸ்மார்ட் ரேபிட் சார்ஜ் வசதிகள் உள்ளன. இது 25 நிமிடங்களில் 1-100% சார்ஜ் ஆகிவிடும். நான்கு ஆண்டுகளுக்கு இந்த சார்ஜ் வேகம் இருக்கும்.
இந்திய டுவிட்டர் அலுவலகம் மூடல்! பணியாளர்களை வீட்டிலிருந்தபடி வேலை செய்ய அறிவுறுத்தல்!!
ஒன்பிளஸ் 11 5ஜி விலை:
8ஜிபி ரேம், 128ஜிபி மெமரி மாடலின் விலை ₹56,999, அதேசமயம் 256ஜிபி மெமரி, 16ஜிபி ரேம் மாடலின் விலை ₹61,999 ஆகும். OnePlus 11 5G ஆனது அமேசான், ஒன்பிளஸ் ஆன்லைன் ஸ்டோர், வெளிக்கடைகளில் கிடைக்கிறது.