Moto G13 அறிமுகம்.. ஆனால் பெரும் ஏமாற்றம்!

இந்தியாவில் Moto G13 ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. இதன் விலை, சிறப்பம்சங்கள், நிறை குறைகளை இங்கு காணலாம்.

Moto G13 has been launched in India priced at Rs 9,499, check review here

மோட்டோரோலா நிறுவனத்தின் புத்தம் புதிய Moto G13 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் விலை ரூ.9,499 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது 64ஜிபி சேமிப்பு மாடலுக்கான விலை ஆகும். வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி விற்பனைக்கு வரும் என்றும், வாடிக்கையாளர்கள் பிளிப்கார்ட், மோட்டோ ஸ்டோர்களில் ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த மாடலில் 4G ஸ்மார்ட்போன் என்பது ஏற்கனவே உலக சந்தையில் கிடைக்கிறது, அது இப்போது இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.

தற்போதைய சூழலில் இந்தியாவில் 5ஜி சேவை பரவலாக வந்துவிட்ட நிலையில், பெரும்பாலான ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் 5ஜி ஸ்மார்ட்போனையே அறிமுகம் செய்கின்றன. ஆனால், மோட்டோவின் இந்த புதிய Moto G13 என்பது வெறும் 4G ஸ்மார்ட்போன் ஆகும்.

Moto G13 ஆனது MediaTek Helio G85 SoC பிராசசருடன் வருகிறது. இதற்கு முன்பு பல பட்ஜெட் போன்களில் பயன்படுத்தப்பட்ட அதே பிராசசர் தான் இதிலும் உள்ளது. மேலும்,  4GB ரேம் மற்றும் 128GB மெமரி, கூடுதல் மைக்ரோ எஸ்டி கார்டு வசதிகள் உள்ளன. இது பயோமெட்ரிக் லாக் போடுவதற்காக பக்கவாட்டில் கைரேகை சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.

இன்னும் சில மாதங்களில் ஆண்ட்ராய்டு 14 வரும் நிலையில், பல ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு 12 மட்டுமே உள்ளது. ஆனால், இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 13 இருப்பது நல்லவிஷயம்.  பொதுவாக இரண்டு வருட பழைமையான ஆண்ட்ராய்டு தளத்தில் இயங்கும் ஸ்மார்ட்போனை யாரும் வாங்க விரும்ப மாட்டார்கள். அதை உணர்ந்த மோட்டோ நிறுவனம் புத்தம் புதிய ஆண்ட்ராய்டு வழங்கியுள்ளது.

கேமராவைப் பொறுது்தவரையில், மோட்டோ ஜி 13 போனில் பின்புறத்தில் 50 மெகாபிக்சல் பிரைமரி கேமராவைக் கொண்டுள்ளது. இது 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ யூனிட் மூலம் இயங்குகிறது. முன்பக்கத்தில், செல்ஃபிக்களுக்காக 8 மெகாபிக்சல் கேமராவும் உள்ளன.

இதைத் தவிர Moto G13 போனில் 576Hz டச் சாம்பிளிங் ரேட், 6.5-இன்ச் IPS டிஸ்ப்ளே,  எல்சிடி திரை, 90 ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட், பாண்டா கிளாஸ் பாதுகாப்பு வசதிகள் உள்ளன. இது வெறும் HD+ டிஸ்ப்ளே என்பதை நினைவில் கொள்ளவும். இந்த பட்ஜெட்டில் FHD+ டிஸ்ப்ளே கொண்ட ஃபோன்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், போனில் 5,000mAh சக்தி கொண்ட பேட்டரி, வெறும் 10W சார்ஜர் உள்ளது. இதுவும் ஒரு குறைதான். தற்போது பெரும்பாலான போன்களில் குறைந்தபட்சம் 18W சார்ஜர் வழங்கப்படுகின்றன. ஆனால், இந்த மோட்டோ போனில் வெறும் 10W சார்ஜர், HD+ டிஸ்ப்ளே, 4ஜி நெட்வொர்க் மட்டுமே உள்ளன என்பதை கருத்தில் கொள்ளவும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios