HONOR 70 Lite ஸ்மார்ட்போன் அறிமுகம்! இந்தியாவுக்கு வருமா?
ஹானர் நிறுவனம் Honor 70 Lite எனும் புதிய குறைந்த விலை ஸ்மார்ட்போனை உலக சந்தைகளில் அறிமுகம் செய்துள்ளது. குறைந்த விலையில் இருந்தாலும், மிதமான டிஸ்பிளே, திறன் கொண்ட கேமராக்கள், பேட்டரி சக்தி போன்ற நல்ல அம்சங்களை கொண்டுள்ளன. இது குறித்த அம்சங்கள் விவரங்களை இங்கு காணலாம்.
ஹானர் நிறுவனத்தின் புத்தம் புதிய HONOR 70 Lite அறிமுகமாகி உள்ளது. இது நடுத்தர வகை ஸ்மார்ட்போனாகும். HONOR 70 சீரிஸில் குறைந்த விலையில் அறிமுகமாகி உள்ளது. ஃபோனில் 6.5-இன்ச் HD+ TFT LCD ஸ்கிரீன் உள்ளது. 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரியுடன் £199க்கு இங்கிலாந்தில் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 20,000) வந்துள்ளது.
குவால்காம் ஸ்னாப்டிராகன் 480+ 5G பிராசசர் இருப்பதால் அன்றாட பணிகளுக்கு ஏற்றது. Magic UI 6.1 உடன் Android 12 மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த போன் 4ஜிபி ரேம் மற்றும் 3ஜிபி விர்ச்சுவல் ரேம் விரிவாக்க வசதியுடன் வருகிறது. ஃபோனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் உள்ளது, 50MP பின்புற கேமரா, 2MP ஆழம் மற்றும் 2MP மேக்ரோ கேமரா மற்றும் 22.5W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஓஷன் ப்ளூ, மிட்நைட் பிளாக், டைட்டானியம் சில்வர் என மூன்று வண்ண நிறங்களில் கிடைக்கிறது. இணையதளத்தில் கூறப்பட்டுள்ளபடி அனைத்து வண்ணங்களும் அனைத்து சந்தைகளிலும் கிடைக்காமல் போகலாம். மற்ற உலக சந்தைகளில் HONOR 70 Lite எப்போது வரும் என்பது குறித்த விவரங்கள் இன்னும் உறுதியான விவரங்கள் வெளிவரவில்லை.
iQOO Z7, iQOO Z7x அறிமுகம்.. சாம்சங்கை காலி செய்துவிடும் போலயே!
ஹானர் 70 லைட் சிறப்பம்சங்கள்:
- திரை: 6.5-இன்ச் (1600 × 720 பிக்சல்கள்) HD+ 20:9 விகிதம் TFT LCD திரை
- பிராசசர்: ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 480+ 8nm
- மெமரி: 4ஜிபி ரேம், 128ஜிபி சேமிப்பு
- சிம் வகை: இரட்டை சிம் (நானோ + நானோ)
- இயங்குதளம்: மேஜிக் UI 6.1 உடன் Android 12
- கேமரா: 50MP பின்புற கேமரா, 2MP மேக்ரோ கேமரா, 2MP டெப்த் கேமரா, 8MP முன்கேமரா
- சென்சார்: பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார்
- ஆடியோ: 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக்
- பரிமாணங்கள்: 163.66 × 75.13 × 8.68 மிமீ; எடை: 194 கிராம்
- நெட்வொர்க்: 5G SA / NSA, டூயல் 4G VoLTE, Wi-Fi 802.11 ac (2.4GHz + 5GHz), புளூடூத் 5.1, GPS/ GLONASS/ Beidou, USB 2.0, NFC
- பேட்டரி: 22.5W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 5000mAh சக்தி கொண்ட பேட்டரி