Asianet News TamilAsianet News Tamil

வியக்க வைக்கும் செல்ஃபி கேமரா கிளாரிட்டி! 3 புதிய ஸ்மார்ட்போன்களை களமிறக்கி கலக்கும் ஹானர்!

ஹானர் 200 பேசிக் மற்றும் ப்ரோ மாடல்களில் 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸ் உள்ளது. அதே நேரத்தில் லைட் மாடலில் 108 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமரா யூனிட் உள்ளது.

Honor 200, Honor 200 Pro Launched Globally Alongside Honor 200 Lite sgb
Author
First Published Jun 14, 2024, 12:14 AM IST

ஹானர் 200 சீரிஸ் உலகளவில் புதன்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. ஹானர் 200 மற்றும் ஹானர் 200 ப்ரோ இரண்டும் இந்த ஆண்டு மே மாதம் சீனாவில் வெளியிடப்பட்டது. இந்த சீரிஸில் ஹானர் 200 லைட் மாடலும் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களில் 50 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது. பேசிக் மற்றும் ப்ரோ மாடல்களில் 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸ் உள்ளது. அதே நேரத்தில் லைட் மாடலில் 108 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமரா யூனிட் உள்ளது. ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான MagicOS 8.0 இயங்குதளத்துடன் செயல்படுகிறது.

பிரிட்டனில் பேசிக் மாடலான Honor 200 மொபைலின் 8GB + 128GB வேரியண்ட் 499.99 பவுண்டு (இந்திய மதிப்பில் ரூ.53,500) விலையில் தொடங்குகிறது. அதே சமயம் Honor 200 Pro மாடலில் 8GB + 512GB வேரியண்ட் 699.99 பவுண்டு (இந்திய மதிப்பில் ரூ.74,800) விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த மொபைல்கள் ஹானர் யுகே தளம் வழியாக ஜூன் 26ஆம் தேதி முதல் கிடைக்கும்.

Honor 200 Lite ஸ்மார்ட்போனின் 8GB + 256GB வேரியண்ட் 279.99 பவுண்டு (இந்திய மதிப்பில் ரூ. 29,900) விலையில் கிடைக்கிறது. இது பிரிட்டனில் ஹானர் வலைத்தளம் மற்றும் கடைகளில் விற்பனைக்கு வந்துவிட்டது.

வேற லெவல் ஸ்பீடு! சாட்டிலைட் இன்டர்நெட் சேவையைத் தொடங்க ஜியோவுக்கு அனுமதி!

பேசிக் ஹானர் 200 கருப்பு, எமரால்டு கிரீன் மற்றும் மூன்லைட் ஒயிட் நிறங்களில் உள்ளது. ப்ரோ மாடல் கருப்பு, மூன்லைட் ஒயிட் மற்றும் ஓஷன் சியான் வண்ணங்களில் கிடைக்கும். லைட் மாடல் சியான் லேக், மிட்நைட் பிளாக், மற்றும் ஸ்டாரி ப்ளூ வண்ணங்களில் கிடைக்கிறது.

ஹானர் 200, ஹானர் 200 ப்ரோ சிறப்பு அம்சங்கள்:

ஹானர் 200 மற்றும் ப்ரோ மாறுபாடு முறையே 6.7-இன்ச் மற்றும் 6.78-இன்ச் 120Hz முழு-HD+ OLED ஸ்கிரீனுடன் வருகின்றன. பேசிக் மாடல் ஸ்னாப்டிராகன் 7 ஜெனரல் 3 பிராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. ப்ரோ மாடல் ஸ்னாப்டிராகன் 8s ஜெனரல் 3 சிப்செட்டைப் பெறுகிறது. இரண்டு ஸ்மாட்போன்களும் ஆண்டிராய்டு 14 அடிப்படையிலான MagicOS 8.0 கொண்டவை. இரண்டிலும் 100W வயர்டு சூப்பர்சார்ஜிங் அம்சத்துடன் 5,200mAh பேட்டரியும் உள்ளது.

ஹானர் 200 லைட் சிறப்பு அம்சங்கள்:

Honor 200 Lite ஆனது 6.7-இன்ச் முழு ஹெ.டி. பிளஸ் AMOLED திரையைக் கொண்டுள்ளது. Mali-G57 MC2 ஜி.பி.ஊ., 8GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ், ஆக்டா-கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 6080 சிம்பெட் ஆகியவற்றைக் கொண்டது. இதிலும் ஆண்ட்ராய்டு 14-அடிப்படையிலான MagicOS 8.0 உள்ளது. 35W வயர்டு சூப்பர் சார்ஜ் அம்சத்துடன் 4,500mAh பேட்டரி உள்ளது.

ஹோனர் 200 சீரிஸின் மூன்று மாடல்களிலும் இரட்டை நானோ சிம், 5G, 4G LTE, Wi-Fi, ப்ளூடூத் 5.1, ஓ.டி.ஜி. மற்றும் USB Type-C ஆகிய அடிப்படையான வசதிகளும் உள்ளன. கைரேகை சென்சார் பக்கவாட்டில் பொருத்தப்பட்டுள்ளது.

வீட்டுக்கடன் EMI ல் சேமிப்பது எப்படி? ரூ.50 லட்சம் கடனை 10 வருடத்தில் தீர்க்க பக்கா பிளான்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios