மீண்டும் இந்தியா வரும் பிக்சல் ஸ்மார்ட்போன்.. வெளியீடு எப்போ தெரியுமா?
அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய பிக்சல் 6a ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையிலும் விற்பனைக்கு வர இருக்கிறது.
கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 6a ஸ்மார்ட்போன் நேற்று இரவு நடைபெற்ற கூகுள் IO நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய பிக்சல் 6a ஸ்மார்ட்போனில் 6.1 இன்ச் FHD+OLED டிஸ்ப்ளே, கூகுள் டென்சார் பிராசஸர் மற்றும் டைட்டன் M2 செக்யூரிட்டி சிப் வழங்கப்பட்டு உள்ளது.
ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ். கொண்டிருக்கும் பிக்சல் 6a ஸ்மார்ட்போனிற்கு மூன்று ஆண்டுகள் ஓ.எஸ். அப்டேட் மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்குவதாக கூகுள் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இத்துடன் 12.2MP பிரைமரி கேமரா, OIS, 12MP அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 8MP செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட்ருக்கும் புதிய பிக்சல் 6a ஸ்மார்ட்போன் 4306mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
முதற்கட்டமாக அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய பிக்சல் 6a ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையிலும் விற்பனைக்கு வர இருக்கிறது. இதுபற்றிய தகவலை கூகுள் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்டில் வெளியிட்டு உள்ளது.
புதிய பிக்சல் 6a ஸ்மார்ட்போன் சார்கோல், சால்க் மற்றும் சேஜ் என இரண்டு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புதிய பிக்சல் 6a ஸ்மார்ட்போனின் விலை 449 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 34 ஆயிரத்து 745 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
கூகுள் பிக்சல் 6a அம்சங்கள்:
- 6.1 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ OLED HDR டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு
- கூகுள் டென்சார் பிராசஸர்
- மாலி G78 MP20 GPU
- டைட்டன் M2 செக்யூரிட்டி சிப்
- 6GB LPDDR5 ரேம்
- 128GB (UFS 3.1) மெமரி
- ஆண்ட்ராய்டு 12
- டூயல் சிம் ஸ்லாட்
- 12.2MP பிரைமரி கேமரா, f/1.7, LED ஃபிளாஷ், OIS
- 12MP 107° அல்ட்ரா வைடு கேமரா, f/2.2, PDAF
- 8MP செல்பி கேமரா, 84° அல்ட்ரா வைடு லென்ஸ், f/2.0
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP67)
- 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைபை 6E 802.11ax (2.4/5 GHz), ப்ளூடூத் 5.2 LE, GPS
- யு.எஸ்.பி டைப் சி 3.1
- 4,306mAh பேட்டரி, 18W பாஸ்ட் சார்ஜிங்