கூகுள் பிக்சல் 6a இந்திய விலை விவரங்கள்.. இணையத்தில் வெளியான சூப்பர் தகவல்...!
இந்த நிலையில், கூகுள் நிறுவனத்தின் குறைந்த விலை பிக்சல் ஸ்மார்ட்போனின் இந்திய விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.
கூகுள் நிறுவனம் தனது பிக்சல் 6a ஸ்மார்ட்போன் I/O 2022 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் புதிய பிக்சல் 6a ஸ்மார்ட்போன் இந்திய சந்தையிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என அறிவித்து இருந்தது.
ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை போன்றே கூகுள் நிறுவனம் தனது புதிய பிக்சல் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்தது. எனினும், இந்திய சந்தையில் புதிய பிக்சல் 6a ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்ற தகவல் தொடர்ந்து மர்மமாகவே வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், கூகுள் நிறுவனத்தின் குறைந்த விலை பிக்சல் ஸ்மார்ட்போனின் இந்திய விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.
கூகுள் பிக்சல் 6a விலை:
அமெரிக்காவில் புதிய கூகுள் பிக்சல் 6a ஸ்மார்ட்போனின் விலை 449 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 35 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதே விலை இந்தியாவிலும் நிர்ணயம் செய்யப்படும் பட்சத்தில் புதிய பிக்சல் 6a ஸ்மார்ட்போனின் விலை ரூ. 35 ஆயிரம் பட்ஜெட்டில் துவங்கி அதிகபட்சமாக ரூ. 40 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
வழக்கமாகவே பிக்சல் ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை அதிகளவில் நிர்ணயம் செய்யப்பட்டு, அதன் பின் படிப்படியாக குறைக்கப்படும். அந்த வகையில் பிக்சல் 4a மாடலை விட புதிய பிக்சல் 6a ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
கூகுள் பிக்சல் 6a அம்சங்கள்:
- 6.1 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ OLED HDR டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு
- கூகுள் டென்சார் பிராசஸர்
- மாலி G78 MP20 GPU
- டைட்டன் M2 செக்யூரிட்டி சிப்
- 6GB LPDDR5 ரேம்
- 128GB (UFS 3.1) மெமரி
- ஆண்ட்ராய்டு 12
- டூயல் சிம் ஸ்லாட்
- 12.2MP பிரைமரி கேமரா, f/1.7, LED ஃபிளாஷ், OIS
- 12MP 107° அல்ட்ரா வைடு கேமரா, f/2.2, PDAF
- 8MP செல்பி கேமரா, 84° அல்ட்ரா வைடு லென்ஸ், f/2.0
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP67)
- 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைபை 6E 802.11ax (2.4/5 GHz), ப்ளூடூத் 5.2 LE, GPS
- யு.எஸ்.பி டைப் சி 3.1
- 4,306mAh பேட்டரி, 18W பாஸ்ட் சார்ஜிங்