Asianet News TamilAsianet News Tamil

உங்கள் போன் 5ஜி சேவையை ஏற்குமா? பார்ப்பது எப்படி? இதை செய்தால் கண்டுபிடித்துவிடலாம்!!

உங்கள் ஃபோன் 5G நெட்வொர்க்குகளை ஆதரிக்கிறதா என்பதை கண்டறிவது எப்படி என்பதை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு. 

does your phone support 5G service and how to find it
Author
First Published Aug 31, 2022, 8:51 PM IST

உங்கள் ஃபோன் 5G நெட்வொர்க்குகளை ஆதரிக்கிறதா என்பதை கண்டறிவது எப்படி என்பதை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு. இந்தியாவில் விரைவில் 5ஜி சேவைகள் தொடங்கப்பட உள்ளன. ரிலையன்ஸ் ஜியோ 5ஜி சேவை தீபாவளிக்குள் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளது. இதன் மூலம் வேகமான இணைய வேகம், சிறந்த நெட்வொர்க், நிலையான இணைப்பு, அல்ட்ரா-ஹை டெபினிஷன் 4கே வீடியோ ஆகியவற்றைப் பார்க்கவும் அணுகவும் முடியும் என கூறப்படுகிறது. பல ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் ஏற்கனவே 5ஜி வசதி கொண்ட போன்களை வழங்கத் தொடங்கியுள்ளன. நோக்கியா, ஒப்போ, சியோமி, சாம்சங் மற்றும் பிற முக்கிய நிறுவனங்கள் சந்தையில் 5ஜி ரெடி போன்களை விற்பனை செய்யத் தொடங்கியுள்ளன.

இதையும் படிங்க: இனி வாட்சப் மூலமாக ஈசியாக பொருட்கள் வாங்கலாம்.. ஜியோமார்ட் & மெட்டா அதிரடி அறிவிப்பு.!!

தற்போது, இந்தியாவில் சாம்சங் கேலக்சி Z ஃபோல்ட் Fold 4 5ஜி, சாம்சங் கேலக்சி எஸ்22, எஸ்22+ மற்றும் எஸ்22 அல்ட்ரா, ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் போன்ற இன்னும் பல 5ஜி ஃபோன்கள் கிடைக்கின்றன. இவற்றில் உங்கள் தேவக்கேற்ற போனை நீங்கள் தேர்வு செய்யலாம். இருப்பினும், ஏற்கனவே உங்களிடம் இருக்கும் மொபைல் உங்களுக்கு விருப்பமாக இருந்து, அதை மாற்ற உங்களுக்கு விருப்பம் இல்லாமல் இருந்து, அதே சமயம், 5G சேவையையும் தவறவிட விருப்பம் இல்லை என்றால், நீங்கள் செய்ய வேண்டியது ஒரே ஒரு விஷயம் தான். உங்கள் ஃபோன் 5G நெட்வொர்க்குகளை ஆதரிக்கிறதா எனச் சரிபார்க்கவும். சரிபார்க்க, உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் கீழ்கண்ட எளிய வழிமுறைகளைப் பின்பற்றவும்.

இதையும் படிங்க: ஒரு மாதத்திற்கு பிஎஸ்என்எல் சிறந்த ரீசார்ஜ் ஃஆபர் அறிவிப்பு!!

செய்ய வேண்டிய வழிமுறைகள்:

  • முதலில், உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் உள்ள செட்டிங்க் ஆப்புக்கு செல்லவும்.
  • அங்கு, 'Wi-Fi & Networks' ஆப்ஷனுக்குச் செல்லவும். சில ஃபோன்களில் அது நெட்வொர்க் மற்றும் இன்டர்நெட் அல்லது நெட்வொர்க் என இருக்கலாம்.
  • அடுத்து, சிம் அல்லது சிம் & நெட்வொர்க் ஆப்ஷனை டேப் செய்யவும். 
  • பேஜை கீழே ஸ்க்ரோல் செய்து, பின்னர் விருப்பமான நெட்வொர்க் வகை (ஃபேவரட் நெட்வொர்க் டைப்) ஆப்ஷனை கிளிக் செய்யவும். 
  • உங்கள் ஸ்மார்ட்போன் 5G நெட்வொர்க்கை ஆதரித்தால், 4G மற்றும் 3G உடன் 5G விருப்பத்தைப் பார்ப்பீர்கள். இருப்பினும், ஃபோன் 5Gஐ ஆதரிக்கவில்லை என்றால், அதில் 5G ஆப்ஷன் இருக்காது. அதாவது உங்கள் தொலைபேசி 5G உடன் வேலை செய்யாது. உங்கள் போன் 5Gஐ ஆதரிக்கவில்லை என்றால், 5G இயக்கப்பட்ட ஸ்மார்ட்போனை வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை.
     
Follow Us:
Download App:
  • android
  • ios