Asianet News TamilAsianet News Tamil

மிக விரைவில் கேலக்ஸி A சீரிஸ் மாடல்கள் வெளியீடு - சூப்பர் அப்டேட் கொடுத்த சாம்சங்

சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி A சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. 

Samsung confirms March 17th launch event for Galaxy A-series smartphones
Author
Tamil Nadu, First Published Mar 14, 2022, 10:31 AM IST

சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டு துவக்கத்திலேயே கேலக்ஸி S22 சீரிஸ் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துவிட்டது. ஃபிளாக்‌ஷிப் மாடல்களை தொடர்ந்து தற்போது கேலக்ஸி A சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய சாம்சங் முடிவு செய்துள்ளது. 

இந்த ஆண்டின் இரண்டாவது பெரிய நிகழ்வுக்கான அழைப்பிதழ்களை ஊடக நிறுவனங்களுக்கு சாம்சங் அனுப்பி வருகிறது. இந்த நிகழ்வு மார்ச் 17 ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. கேலக்ஸி A சீரிஸ் மாடல்களின் அறிமுக நிகழ்வை சாம்சங் நேரலை செய்கிறது. 

Samsung confirms March 17th launch event for Galaxy A-series smartphones

தற்போதைய தகவல்களின் படி சாம்சங் நிறுவனம் கேலக்ஸி A சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்யும் என தெரியவந்துள்ளது. எனினும், எந்தெந்த மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. முன்னதாக வெளியான தகவல்களின் படி சாம்சங் நிறுவனம் கேலக்ஸி A33, கேலக்ஸி ஏ53 மற்றும் கேலக்ஸி A73 போன்ற மாடல்களை இந்த நிகழ்வில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதில் கேலக்ஸி A33 சாம்சங் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்த A32 மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்கும் என்றும் கேலக்ஸி A53 மற்றும் A73 மாடல்கள் சாம்சங் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகம் செய்த கேலக்ஸி A52 மற்றும் A72 மாடல்களின் மேம்பட்ட வெர்ஷன்களாக இருக்கும். 

அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி A73 மாடலில் 6.7 இன்ச் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 750G பிராசஸர், கேலக்ஸி A53 மாடலில் 6.5 இன்ச் டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 1200 பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது. புது ஸ்மார்ட்போன்கள் பற்றிய முழு விவரங்கள் இன்னும் ஒரிரு நாட்களில் வெளியாகி விடும்.

Follow Us:
Download App:
  • android
  • ios