Asianet News TamilAsianet News Tamil

Realme 9 pro : ஒருவழியா சொல்லிட்டாங்க... worldwide ரிலீஸ்-க்கு தயாரான ரியல்மி 9 ப்ரோ சீரிஸ்

ரியல்மி நிறுவனம் தனது 9 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது.

Realme 9 Pro Series India Launch Date Set for February 16
Author
Tamil Nadu, First Published Feb 3, 2022, 12:26 PM IST

ரியல்மி 9 ப்ரோ மற்றும் ரியல்மி 9 ப்ரோ  பிளஸ் மாடல்கள் இந்தியாவில் பிப்ரவரி 16 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இரு ஸ்மார்ட்போன்களின் வெளியீடு பற்றி கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளியாகி வந்தன. அந்த வரிசையில், தற்போது இவற்றின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 

புதிய ஸ்மார்ட்போன் மாடல்களின் வெளியீட்டு தேதியை ரியல்மி நிறுவனத்தின் துணை தலைவர் மாதவ் சேத் தெரிவித்தார். வெளியீட்டு தேதி மட்டுமின்றி இரு மாடல்களின் அம்சங்களும் டீசர்களில் தெரியவந்துள்ளது. அதன்படி ரியல்மி 9 ப்ரோ சீரிஸ் மாடல்களில் மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள் வழங்கப்படுகின்றன. 

ரியல்மி 9 ப்ரோ சீரிஸ் வெளியீட்டு நிகழ்வு பிப்ரவரி 16, மதியம் 1.30 மணிக்கு துவங்குகிறது. இந்த நிகழ்வு விர்ச்சுவல் முறையில் நடைபெறுகிறது. வெளியீட்டை ரியல்மி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்து வருகிறது. புதிய ஸ்மார்ட்போன்கள் இதே தேதியில் சர்வதேச சந்தையிலும் அறிமுகம்  செய்யப்பட இருக்கின்றன. 

Realme 9 Pro Series India Launch Date Set for February 16

இந்திய சந்தையில் ரியல்மி 9 ப்ரோ சீரிஸ் விலை ரூ. 15 ஆயிரத்திற்கும் அதிகமாக நிர்ணயம்  செய்யப்படும் என மாதவ் சேத் தெரிவித்தார். "2022 ஆண்டு பிரீமியம் பாதையில் பயணிக்க இருப்பதால், 9 ப்ரோ சீரிஸ் விலையை ரூ. .15 ஆயிரத்திற்கும் அதிகமாக நிர்ணயம் செய்ய முடிவு செய்து இருக்கிறோம். ப்ரோ சீரிசில் அனைத்து மாடல்களிலும் 5ஜி வழங்கப்படுகிறது. இதனால் ப்ரோ சீரிஸ் மாடல்கள் மேம்பட்ட பிரீமியம் மிட்-ரேன்ஜ் அனுபவத்தை வழங்கும்," என அவர் தெரிவித்ததார். 

புதிய ப்ரோ சீரிஸ் மாடல்கள் மட்டுமின்றி ரியல்மி 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களையும் அறிமுகம் செய்ய ரியல்மி திட்டமிட்டுள்ளது. இந்த காலாண்டிலேயே ரியல்மி பட்ஸ் ஏர் 2 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இத்துடன் 65 இன்ச் ரியல்மி டி.வி.யும் உருவாக்கப்பட்டு வருகிறது.

அம்சங்களை பொருத்தவரை ரியல்மி 9 ப்ரோ மற்றும் ரியல்மி 9 ப்ரோ பிளஸ் மாடல்களில் மூன்று கேமரா சென்சார்கள், லைட் ஷிஃப்ட் டிசைன் வழங்கப்படுகிறது. இது சூரிய வெளிச்சத்திற்கு ஏற்ப ஸ்மார்ட்போனின் நிறத்தை மாற்றும். ரியல்மி 9 ப்ரோ பிளஸ் மாடலில் 50MP பிரைமரி கேமரா, ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 920 பிராசஸர் வழங்கப்படுகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios