Asianet News TamilAsianet News Tamil

OnePlus Nord CE 2 5G: வெயிடிங்ல இருங்க.... சில மணி நேரங்களில் குறைந்த விலை நார்டு போன் அறிமுகம்

ஒன்பிளஸ் நிறுவனத்தின் நார்டு CE 2 5ஜி ஸ்மார்ட்போன் இன்று மாலை இந்திய சந்தையில் அறிமுகமாகிறது.

OnePlus Nord CE 2 5G, OnePlus TV Y1S Series India Launch Today How to Watch Livestream
Author
Tamil Nadu, First Published Feb 17, 2022, 12:03 PM IST

ஒன்பிளஸ் நார்டு CE 2 5ஜி ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் அறிமுகமாகிறது. புதிய நார்டு ஸ்மார்ட்போன் மட்டுமின்றி ஒன்பிளஸ் டி.வி.  Y1S எட்ஜ் ஸ்மார்ட் டி.வி. மாடல்களும் அறிமுகம்  செய்யப்பட இருக்கிறது. புதிய ஒன்பிளஸ் நார்டு CE 2 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டிமென்சிட்டி 900 பிராசஸர் வழங்கப்படுகிறது. இத்துடன் மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள் வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் ஒன்பிளஸ் நிறுவனம் இரண்டு புதிய ஸ்மார்ட் டி.வி. மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. 

நேரலை விவரம்

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய நார்டு CE 2 5ஜி ஸ்மார்ட்போன்  மற்றும் ஒன்பிளஸ் டி.வி. Y1S மற்றும் Y1S எட்ஜ் ஸ்மார்ட் டி.வி. மாடல்களுக்கான அறிமுக நிகழ்வு இன்று (பிப்ரவரி 17) இரவு 7 மணிக்கு துவங்குகிறது. இந்த நிகழ்வின் நேரலை ஒன்பிளஸ் இந்தியா அதிகராப்பூர்வ யூடியூப் சேனலில் ஒளிபரப்பாகிறது. இத்துடன் ஒன்பிளஸ் வலைதளத்திலும் நிகழ்வின் நேரலை பார்க்க முடியும்.

OnePlus Nord CE 2 5G, OnePlus TV Y1S Series India Launch Today How to Watch Livestream

ஒன்பிளஸ் நார்டு CE 2 5ஜி மாடலின் 6GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 23,999 என்றும் 8GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 25,999 வரை நிர்ணயம்  செய்யப்படலாம். இந்த ஸ்மார்ட்போன் பஹாமா புளூ மற்றும் கிரே மரர் என இருவித நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது. 

அம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் நார்டு CE 2 5ஜி மாடலில் 6.43 இன்ச் FHD+AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், HDR10+, கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, மீடியாடெக் டிமென்சிட்டி 900 பிராசஸர், 3.5mm ஹெட்போன் ஜாக், பிரத்யேக மைக்ரோ எஸ்.டி.  கார்டு ஸ்லாட் உள்ளிட்டவை வழங்கப்படலாம். புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமரா, 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.

ஒன்பிளஸ் டி.வி. Y1S மற்றும் Y1S எட்ஜ் மாடல்கள் 32 இன்ச் மற்றும் 43 இன்ச் அளவுகளில் கிடைக்கும் என தெரிகிறது. இரு மாடல்களிலும் காமா என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட் டி.வி. ஆண்ட்ராய்டு டி.வி. 11 ஓ.எஸ்., லோ லேடென்சி மோட் கொண்டிருக்கிறது. இரு மாடல்களிலும் டூயல் ஹேண்ட் வை-ஃபை வசதி கவழங்கப்படும் என தெரிகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios