Asianet News TamilAsianet News Tamil

OnePlus 10 Pro 5G : அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஃபிளாக்‌ஷிப் மாடல் - வெளியீட்டு தேதி அறிவித்த ஒன்பிளஸ்

OnePlus 10 Pro 5G : முன்னதாக சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி மாடல் வெளியீடு 2022 மார்ச் மாத இறுதியில் நடைபெறும் என ஒன்பிளஸ் அறிவித்து இருந்தது.

OnePlus 10 Pro 5G to Finally Launch in India on March 31
Author
India, First Published Mar 25, 2022, 11:39 AM IST

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் மார்ச் 31 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அறிமுக தேதி அடங்கிய டீசர் ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. வெளியீட்டு தேதியுடன் இதன் அம்சங்கள் அதன் சீன வேரியண்டில் இருந்ததை போன்றே வழங்கப்படும் என தெரியவந்துள்ளது.

சீன சந்தையில் ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஆண்டு ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் மாடலாக ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி அறிமுகமானது. இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர், 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட AMOLED டிஸ்ப்ளே, 80 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

 

முன்னதாக சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி மாடல் வெளியீடு இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் நடைபெறும் என ஒன்பிளஸ் நிறுவனம் அறிவித்து இருந்தது. அதன்படி மார்ச் 27 ஆம் தேதி ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 

ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

- 6.7 இன்ச் QHD+ 1440x3216 பிக்சல் வளைந்த LTPO 2.0 AMOLED 120Hz டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 ப்ரிசாஸர் 
- அதிகபட்சம் 12GB LPDDR5 ரேம்
- அதிகபட்சம் 256GB UFS 3.1 மெமரி
- 48MP பிரைமரி கேமரா
- 50MP அல்ட்ரா வைடு கேமரா
- 8MP டெலிபோட்டோ லென்ஸ்
- 32MP செல்ஃபி கேமரா
- 5ஜி, 4ஜி எல்.டி.இ., வைபை 6, ப்ளூடூத் 5.2
- யு.எஸ்.பி. டைப் சி போர்ட்
- 5000mAh பேட்டரி
- 80 வாட் சூப்பர் ஃபிளாஷ் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்
- 50 வாட் ஃபிளாஷ் சார்ஜ் வயர்லெஸ்

OnePlus 10 Pro 5G to Finally Launch in India on March 31

இதே நிகழ்வில் புதிய ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் மட்டுமின்றி ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ சில்வர் எடிஷன் மற்றும் ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லஸ் Z2 போன்ற மாடல்களும் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. அறிமுக நிகழ்வு மார்ச் 31 ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு துவங்க இருக்கிறது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios