Asianet News TamilAsianet News Tamil

Ola s1 pro : ரெடியா இருங்க.. அடுத்த விற்பனை தேதி இது தான் - ஹோலி ஸ்பெஷல் நிறத்தில் ஓலா S1 ஸ்கூட்டர்!

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது S1 ப்ரோ மாடலுக்கான அடுத்த விற்பனை தேதியை அறிவித்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம். 

Ola S1 Pro purchase window reopen date new holi special colour
Author
Tamil Nadu, First Published Mar 15, 2022, 11:43 AM IST

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் வந்த வேகத்தில் விற்றுத் தீர்ந்து விடுகின்றன. அறிமுகம் செய்யப்பட்டது முதல் இன்று வரை ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குவது பெரும் சவாலான காரியமாகவே இருந்து வருகிறது. ஓலா S1 மற்றும் S1 ப்ரோ மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கும் அசத்தலான அம்சங்கள் மற்றும் குறைந்த விலை காரணமாகவே இந்த மாடல்களுக்கு இத்தகைய வரவேற்பு கிடைத்து இருக்கிறது.

அறிமுகம் செய்யப்பட்டதும் புதிய ஸ்கூட்டர்களை சொன்ன நேரத்தில் வினியோகம் செய்வதில் ஓலா எலெக்ட்ரிக் சற்றே திணறிவிட்டது. பின் சில வாரங்கள் தாமதத்துடனேயே ஓலா ஸ்கூட்டர்கள் வினியோகம் துவங்கியது. சில மாதங்கள் வரை வினியோகம் சார்ந்த பிரச்சினைகள் அதிகமாக இருந்து வந்தது. இந்த நிலையில், ஓலா S1 ப்ரோ மாடலுக்கான அடுத்த விற்பனை தேதியை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

 

அதன்படி ஓலா S1 ப்ரோ மாடலுக்கான அடுத்த விற்பனை மார்ச் 17 ஆம் தேதி தொடங்குகிறது. ஏற்கனவே ஓலா S1 ப்ரோ மாடலை வாங்க முன்பதிவு செய்தவர்கள் மார்ச் 17 ஆம் தேதி ஸ்கூட்டரை வாங்கிக் கொள்ளலாம். மற்றவர்கள் மார்ச் 18 ஆம் தேதி வாங்கிக் கொள்ளலாம் என ஓலா எலெக்ட்ரிக் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. ஏற்கனவே ஓலா S1 மற்றும் ஓலா S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பல்வேறு நிறங்களில் கிடைக்கின்றன. 

இந்த நிலையில், ஹோலி கொண்டாட்டத்தின் அங்கமாக ஓலா S1 ப்ரோ மாடல் 'கெருவா' (Gerua) எனும் புதிய நிறத்தில் கிடைக்கும் என ஓலா எலெக்ட்ரிக் அறிவித்து இருக்கிறது. ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள் முதலில் ஓலா S1 ப்ரோ மாடலை வாங்க முடியும். மற்றவர்கள் ஒரு நாள் கழித்து தான் வாங்க முடியும் என ஓலா எலெக்ட்ரிக் வெளியிட்டு இருக்கும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு  இருக்கிறது. 

முன்பை போன்றே ஓலா S1 ஸ்கூட்டர்களை வாங்கும் நடைமுறை முழுக்க முழுக்க ஆன்லைனிலேயே நடைபெறும். இதற்கு வாடிக்கையாளர்கள் ஓலா செயலியை பயன்படுத்த வேண்டும். மார்ச் 17 மற்றும் மார்ச் 18 ஆகிய தேதிகளை ஓலா S1 ப்ரோ ஸ்கூட்டரை வாங்குவோருக்கான வினியோகம் ஏப்ரல் மாத வாக்கில் துவங்கும் என ஓலா எலெக்ட்ரிக் தெரிவித்து இருக்கிறது. ஓலா எலெக்ட்ரிக் வழக்கப்படி புதிய ஸ்கூட்டர் மாடல்கள் வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே டோர் டெலிவரி செய்யப்பட்டு விடும்.

Ola S1 Pro purchase window reopen date new holi special colour

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் ஓலா S1 ப்ரோ மாடல் தமிழ் நாட்டின் ஓசூர் பகுதியில் உள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஓலா ஃபியூச்சர்ஃபேக்டரி என அழைக்கப்படும் இந்த ஆலை 500 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த உற்பத்தி ஆலையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஒரு கோடி யூனிட்கள் வரை உற்பத்தி செய்ய முடியும். 

புதிய ஓலா S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 131 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. மேலும் இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 115 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். மூன்றே நொடிகளில் 100 கிலோமீட்டரை எட்டும் திறனும் ஓலா S1 ப்ரோ மாடலின் சிறப்பு அம்சம் ஆகும்.

Follow Us:
Download App:
  • android
  • ios