Asianet News TamilAsianet News Tamil

Kia Seltos Diesel: புது கியர்பாக்ஸ் கொண்ட செல்டோஸ்... வேற லெவல் அப்டேட்... விலை எவ்வளவு தெரியுமா?

Kia Seltos Diesel: புது கியர்பாக்ஸ் மட்டுமின்றி செல்டோஸ் மாடலின் சஸ்பென்ஷனையும் கியா நிறுவனம் அப்டேட் செய்து இருக்கிறது.

Kia Seltos Diesel iMT priced at Rs 13.99 lakh
Author
India, First Published Apr 5, 2022, 11:15 AM IST

கியா நிறுவனம் தனது செல்டோஸ் டீசல் iMT வேரியண்டை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ. 13 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். அறிமுகத்தின் போது செல்டோஸ் டீசல் மாடல் ஒற்றை வேரியண்டில் மட்டுமே கிடைக்கும். செல்டோஸ் டீசல் iMT மாடல் மட்டும் தான் இந்தியாவிலேயே டீசல் iMT ஆப்ஷனுடன் கிடைக்கிறது.

ஹூண்டாய் நிறுவனத்தை போன்றே கியா நிறுவனமும் iMT கியர்பாக்ஸ்-ஐ பெட்ரோல் மாடல்களில் மட்டும் வழங்கி வந்தது. தற்போது முதல் முறையாக டீசல் என்ஜினுடன் iMT கியர்பாக்ஸ் வழங்க கியா முடிவு செய்துள்ளது. புது கியர்பாக்ஸ் மட்டுமின்றி செல்டோஸ் மாடலின் சஸ்பென்ஷனையும் கியா நிறுவனம் அப்டேட் செய்து இருக்கிறது. iMT கியர்பாக்ஸ் கொண்ட செல்டோஸ் டீசல் மாடல் ஸ்பார்க்லிங் சில்வர் மற்றும் இம்பீரியல் புளூ நிறங்களில் கிடைக்கிறது.

முதல் முறை:

கியா செல்டோஸ் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் கொண்ட மாடலில் புதிதாக 6 ஸ்பீடு iMT கிளட்ச்லெஸ் மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கி இருக்கிறது. இந்த டீசல் என்ஜின் தற்போது - 6 ஸ்பீடு மேனுவல், டார்க் கன்வெர்ட்டர் மற்றும் iMT என மூன்று  வித கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. iMT கியர்பாக்ஸ் மிட்-லெவல் HTK பிளஸ் வேரியண்டில் மட்டுமே வழங்கப்படுகிறது. சமீபத்தில் ஹூண்டாய் நிறுவனம் தனது கிரெட்டா மாடலில் iMT கியர்பாக்ஸ் ஆப்ஷனை அறிமுகம் செய்து இருந்தது.

Kia Seltos Diesel iMT priced at Rs 13.99 lakh

புது அம்சங்கள்:

புதிய கியர்பாக்ஸ் மட்டுமின்றி கியா செல்டோஸ் மாடலில் பல்வேறு புது அம்சங்களை கியா அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ரியர் டிஸ்க் பிரேக், இ.எஸ்.சி., வெஹிகில் ஸ்டேபிலிட்டி மேனேஜ்மெண்ட், பக்கவாட்டு ஏர்பேக் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் அனைத்து வேரியண்டிலும் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படலாம். HTX பிளஸ் வேரியண்டில் கர்டெயின் ஏர்பேக், HTX வேரியண்டில் டிராக்‌ஷன் / டிரைவ் மோட்கள், பேடில் ஷிஃப்டர்கள் உள்ளிட்டவை வழங்கப்படலாம்.

இவற்றுடன் புதிய கியா செல்டோஸ் மாடலின் முன்புறம் இரட்டை ஏர்பேக், முன்புற ஏர்பேக் உள்ளிட்டவை ரியர் டிஸ்க் பிரேக்குகளுடன் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்பட இருக்கிறது. இந்த மாடலிலும் கியா கனெக்ட் லோகோ வழங்கப்படும் என தெரிகிறது. 

இந்திய சந்தையில் கியா செல்டோஸ் மாடல் ஹூண்டாய் கிரெட்டா, ஸ்கோடா குஷக், ஃபோக்ஸ்வேகன் டைகுன், எம்.ஜி. ஆஸ்டர் மற்றும் நிசான் கிக்ஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios