ஜியோ 2 மொபைல் போன் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது. கடந்த ஜூலை 6ஆம் தேதி, ரிலையன்ஸ் நிறுவனத்தில் 41 ஆவது ஆண்டு பொதுக்கூட்டம் மும்பையில் நடைப்பெற்றது. அப்போது பேசிய ஈஷா அம்பானி, புதியதாக வெளியிட இருக்கும் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தார். 

இதற்கு முன்னதாக ஜியோ நிறுவனம் சார்பில் ரூ.1,500 விலையில் ஜியோ போன் வெளியிட்டு இருந்தது. மேலும், ஜியோ 2  ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த ஸ்மார்ட்போனுக்கு ஜியோ போன் 2 என பெயரிடப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து இன்று முதல், ஜியோ போன் 2 இன்று முதல் விற்பனைக்கு வந்தது.
 
ஜியோ 2 சிறப்பம்சங்கள்:

512 எம்பி ரேம்

மைக்ரோ சிப் மூலம் கூடுதலாக 128 ஜிபி ஸ்டோரேஜை இணைக்க முடியும். 

2.4 இன்ச் டிஸ்ப்ளே 

வாட்ஸ் அப், பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட அனைத்து ஆப்ஸ்களையும் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மொபைல் மக்களிடேயே நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.