ஜியோ அறிவிக்கும் எந்த ஒரு அறிவிப்பும் அது ஒரு சலுகையாக தான் இருக்கும் என நம்பும் அளவிற்கு  மக்கள் மனதில் தனக்கென நீங்கா இடம் பிடித்துள்ளது.

அதன்படி, இன்று இரவு 12 மணி முதல் ஜியோ போன் 2-ன் இரண்டாம் கட்ட விற்பனை தொடங்க உள்ளது.வெறும் ரூ.1,500 கட்டணத்தில் புதிய ஜியோ போன் 2 ஐ அறிமுகம் செய்தது. இந்த போனில் பல புதிய அம்சங்கள் இடம் பெற்று இருந்ததால் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. 

இதன் முதற்கட்ட விற்பனை ஆகஸ்ட் 15 ஆம் தேதி தொடங்கியது. விற்பனை தொடங்கிய சில நிமிடத்திலேயே அனைத்து மொபைல்களும் விற்று தீர்ந்தன. இதனை தொடர்ந்து இன்று இரண்டாம் கட்ட விற்பனை தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்பம்சங்கள்

512 எம்பி ரேம் 
4 ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்டது. 
2.4 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 2 எம்.பி பின்புறம் கேமரா உள்ளது. 
இந்த மொபைலில் வாட்ஸ் அப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.