உலகம் முழுவதும் இன்ஸ்டாகிராம் சேவை பாதிக்கப்பட்டுள்ளது

மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான சொந்தமான புகைப்படப் பகிர்வு தளமான இன்ஸ்டாகிராம் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப சிக்கல் காரணமாக இன்ஸ்டாகிராம் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால், உலகம் முழுவதும் உள்ள இன்ஸ்டாகிராம் பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Scroll to load tweet…

Scroll to load tweet…

ட்விட்டரில் #instagramdown என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகியுள்ளது. 'மன்னிக்கவும், ஊட்டத்தைப் புதுப்பிக்க முடியவில்லை' மற்றும் 'ஏதோ தவறாகிவிட்டது' போன்ற பிழைச் செய்திகளை இன்ஸ்டாகிராம் செயலி காட்டுவதாக பயனர்கள் புகார் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இன்ஸ்டாகிராம் செயலி பாதிக்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் அதன் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.