Asianet News TamilAsianet News Tamil

Youtube-ல் உங்களுக்கே தெரியாத அட்டகாசமான அம்சங்கள்!

யூடியூப்பில் சமீபத்தில் கொண்டு வரப்பட்டுள்ள பயனுள்ள 3 வசதிகளை குறித்து இங்குப் பார்க்கலாம்.

Youtube Tips and Tricks that you have to know in Tamil
Author
First Published Oct 3, 2022, 12:13 PM IST

உலகில் ஸ்ட்ரீமிங் தளங்களில் முன்னனி இடத்தில் இருப்பது யூடியூப். இதில் பொழுதுபோக்கு வீடியோக்கள், படங்கள், அறிவு சார்ந்த வீடியோக்கள், சமையல் குறிப்புகள், குழந்தைகள் பாடல்கள் என ஏராளமான வகை வீடியோக்கள். மேலும், பயனர்களின் வசதிக்கு ஏற்ப தொடர்ந்து பல அப்டேட்டுகள் யூடியூப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அண்மையில் யூடியூப்பில் கொண்டு வரப்பட்ட அட்டகாசமான 3 வசதிகளைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

முழு ஸ்கிரீனுக்கான ஷார்ட்கட்

ஒரு வீடியோவை ஃபுல் ஸ்கிரனீனல் பார்ப்பதற்கு, Full Screen Icon கிளிக் செய்வது வழக்கம், ஆனால், இதற்கும் ஷார்ட்கட் உள்ளது. வீடியோ பார்த்துக் கொண்டிருக்கும் போது, உங்கள் வீடியோவை மேலே ஸ்வைப் செய்தால் போதும், அப்படியே ஃபுல்ஸ்கிரினில் வீடியோ வந்து விடும், இதே போல், மீண்டும் ஸ்வைப் செய்தால் பழைய நிலைக்கு வந்துவிடும்.

தேவையில்லாத வேலைய பார்க்கும் Facebook.. இப்போ இது ரொம்ப அவசியம் தானா?

Youtube Tips and Tricks that you have to know in Tamil

வீடியோவை ஷேர் செய்தல்

இரண்டாவதாக ஒரு வீடியோவின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் ஷேர் செய்யலாம். வீடியோ பிளேயரின் கீழ் உள்ள ஆப்ஷன்களில், கிளிப் (Clip) என்று இருக்கும், அதை கிளிக் செய்தால், எந்த பகுதியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை, குறிப்பிட்ட  டைம் நிமிடங்களை என்டர் செய்தால் போதும். நீங்கள் ஷேர் செய்யும் லிங்க்கை கிளிக் செய்தால், குறிப்பிட்ட பகுதி மட்டுமே வீடியோவாக தெரியும். இவ்வாறு உங்களுக்கு பிடித்த வீடியோ கிளிப்புகளை உறவினருக்கோ அல்லது நண்பர்களுக்கோ ஷேர் செய்யலாம்.

Whatsapp வீடியோ காலில் புதிய வசதி!

வீடியோவில் அதிகம் பேர் பார்த்த பகுதி

அடுத்ததாக,  ஒரு வீடியோவில் எது முக்கியமான பகுதி என்பதை தெரிந்து கொள்ள, கமெண்ட்ஸ் பக்கத்தில் டைமிடு என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.  இதன் மூலமாக நீங்கள் பார்க்கக்கூடிய வீடியோவின் முக்கிய பகுதியை காணலாம். இதைத்தவிர நீங்கள் பார்த்துக்கொண்டு இருக்கக்கூடிய வீடியோவின் நிமிடத்திற்கு ஏற்ற கமெண்டுகள் அப்டேட் செய்வதையும் உங்களால் காண முடியும்.

Follow Us:
Download App:
  • android
  • ios