WhatsApp Update: இனி ஒரே நேரத்தில், எளிமையாக இப்படி செய்யலாம்!

மைக்ரோசாப்ட் தளத்தில் இயங்கும் வாட்ஸ்அப்பில் இனி ஒரே நேரத்தில் பல மெசேஜ்களை செலக்ட் செய்யும் அம்சம் வரவுள்ளது.

WhatsApp is rolling out a new update for the Windows beta app in Microsoft Store

வாட்ஸ்அப்பில் ஒருவரது சாட்டில் உள்ள மெசேஜ்களை மற்றவர்களுக்கு ஃபார்வேர்டு செய்யலாம், டெலிட் செய்யலாம், பதிவு செய்யலாம். இது போன்ற பல அம்சங்கள் உள்ளன. இருப்பினும் இந்த அம்சங்கள் எல்லா தளத்திலும் கிடைக்கவில்லை. அதிலும், மைக்ரோசாப்ட் தளத்தில் குறிப்பிட்ட அளவிலான அம்சங்கள் மட்டுமே உள்ளன, மேலும், வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ள பல வசதிகள் மைக்ரோசாப்ட் தளத்தில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, சில பீட்டா சோதனையாளர்களுக்கு வாட்ஸ்அப் ஒரு அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இது பயனர்கள் தங்கள் சாட் ஹிஸ்டரியை (Chat History) எளிமையாக கையாளும் வகையில் கொண்டு வரப்பட்டுளளது. குறிப்பாக, மைக்ரோசாப்ட் ஸ்டோரில் Windows 2.2309.2.0 அப்டேட் குறித்த சில விவரங்கள் WhatsApp பீட்டா தளத்தில் வெளியாகியுள்ளன. 

அதன்படி, இப்போது ஒருவருக்கு அல்லது ஒரு குழுவில் நாம் அனுப்பிய மெசேஜ்கள், நமக்கு வந்த மெசேஜ்களை தேர்ந்தெடுத்து, அவற்றை ஒரே நேரத்தில் நீக்கவோ அல்லது அனுப்பவோ தேர்வு செய்யலாம். இது தொடர்பான ஸ்கிரீன்ஷாட்டும் வெளியாகியுள்ளது. இந்த ஸ்கிரீன்ஷாட்டில் நீங்கள் பார்ப்பது போல், ஒரு மெசேஜில்  மெனுவில் "Select" என்ற ஆப்ஷன் உள்ளது. அதை கிளிக் செய்த பிறகு பல மெசேஜ்களை தேர்ந்தெடுக்கலாம். மாற்றாக, அந்த சேட்டில் எங்கு வேண்டுமானாலும் கிளிக் செய்தால் கூட, "மெசேஜ்களை தேர்ந்தெடு" என்ற ஆப்ஷன். இதை கிளிக் செய்வதன் மூலம்,  ஒரு மெசேஜில் பல மெசேஜ்களை தேர்ந்தெடுக்க பயனர்களுக்கு உதவுகிறது.

கலக்கலான டிசைனில் வரும் iPhone 14 சீரிஸ்! ஆனா இத எதிர்பார்க்கல!!

இதற்கு முன்பு, பயனர்கள் ஒவ்வொரு மெசேஜாக தேர்ந்தெடுத்து அவற்றை தனித்தனியாக டெலிட் செய்ய வேண்டியிருந்தது, அல்லது ஃபார்வேர்டு செய்ய வேண்டுமென்றால் கூட ஒவ்வொன்றாகவே தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும். இனி தேவையான மெசேஜ்களை மொத்தமாக தேர்ந்தெடுத்து அனுப்பலாம். இவ்வாறு பயனர்கள் ஒரே நேரத்தில் பல மெசேஜ்களை தேர்ந்தெடுப்பதன் மூலம் நேரத்தை மிச்சப்படுத்தலாம்.

மைக்ரோசாப்ட் ஸ்டோரில் வாட்ஸ்அப் விண்டோஸ் 2.2309.2.0 பதிப்பில் மேற்கண்ட அம்சம் உள்ளது. இது தற்போதைக்கு பீட்டா பதிப்பில் மட்டுமே உள்ளது. விரைவில் விண்டோஸ் தளத்தில் உள்ள எல்லா பயனர்களுக்கும் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு தளத்தில் இந்த அம்சம் ஏற்கெனவே இருப்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios