Tech Tips : இது தெரியாம போச்சே.. இனி காசு கொடுத்து சாப்ட்வேர் வாங்க வேண்டாம்!
பிரிமீயம் சாப்ட்வேர்களுக்கு நிகரான சாப்ட்வேர் விவரங்களை வழங்கும் இணையதளத்தைப் பற்றி இங்கு காணலாம். இதில் அச்சு அசலாக பிரீமியம் தரத்தில் இருக்கும் சாப்ட்வேர்களை இலவசமாக பயன்படுத்தலாம்.
ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய தேவையைப் பொறுத்து சாப்ட்வேர்களை காசு கொடுத்து வாங்க வேண்டிய சூழல் ஏற்படும். வீடியோ எடிட்டிங் சாப்ட்வேர், விண்டோஸ் சாப்ட்வேர், டெலிட் ஆன கோப்புகளை மீட்டெடுப்பதற்கான சாப்ட்வேர் உள்ளிட்ட பல மென்பொருள்கள் கட்டண சேவை அடிப்படையில் தான் வழங்கப்படுகிறது.
டுவிட்டரில் Tweet Edit அம்சம் அமலுக்கு வந்தது! பயன்படுத்துவது எப்படி?
பெரும்பாலானோர் இதுபோன்ற கட்டண சாப்ட்வேர்களை இலவசமாகப் பயன்படுத்துவதற்காக, பல Key Codes, Licence Key போன்றவற்றை தேடுவதுண்டு. அவை சட்டவிரோதமான செயல் என்பதை தாண்டி, பல வைரஸ்களை எதிர்கொள்ள நேரிடும்.
இதுபோன்ற சிக்கல்கள் இல்லாமல், எளிமையாக, பிரீமியம் சாப்ட்வேர்களைப் போலவே இருக்கும் பல இலவச சாப்ட்வேர்கள் ஆன்லைனில் கிடைக்கின்றன. அந்த மென்பொருள் விவரங்களை https://alternativeto.net/ என்ற இணையதளம் வழங்குகிறது.
நீங்கள் இரவு நேரங்களில் சேட் செய்பவரா ? அப்படியானால் இந்த ட்ரிக் உங்களுக்கு கட்டாயம் பயன்படும்
உங்களுக்கு என்ன சாப்ட்வேர் வேண்டுமோ அதன் பெயரை மேற்கண்ட இணையதளத்தில் எண்டர் செய்தாலே போதும். அதை ஒத்து இருக்கக்கூடிய மென்பொருள்களை பட்டியலிடுகிறது. இதன் மூலம் உங்களுக்குத் தேவையான, பயன்படக்கூடிய சாப்ட்வேரை இலவசமாகப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
உதாரணத்திற்கு உங்களுக்கு அடோப் பிரீமியர் ப்ரோ மென்பொருள் தேவைப்படுகிறது என்றால், https://alternativeto.net/ என்ற தளத்தில் adobe premiere pro என்று எண்டர் செய்ய வேண்டும். இப்போது உங்களுக்குத் தேவையான எடிட்டிங் சாப்ட்வேர்கள், அடோப்பில் உள்ள அதே அம்சங்களைக் கொண்ட மென்பொருள்கள் கிடைக்கும்.