WhatsApp Tricks: உங்கள் நண்பர் டெலிட் செய்த மெசேஜ்களை வாசிப்பது எப்படி?

வாட்ஸ்அப்பில் உங்கள் நண்பர் டெலிட் செய்த மெசேஜ்களை வாசிப்பதற்கும் ஒரு டிரிக்ஸ் உள்ளது. அந்த டிரிக்கை பயன்படுத்தி டெலிட் ஆன மெசேஜ்களை கூட படிக்கலாம்.
 

Tech tips: How to read WhatsApp messages deleted by your friend, check details here

வாட்ஸ்அப்பில் கடந்த சில மாதங்களாக எக்கச்சக்க அப்டேட்டுகள் வந்த வண்ணம் உள்ளன. அவற்றில் முக்கியமாக பயனர்களின் தனிப்பட்ட விஷயங்களை பாதுகாக்கும் வகையில் தனியுரிமை அம்சங்கள் மேம்படுத்தப்பட்டள்ளன. போட்டோக்களை பார்த்த உடனே தானாகவே டெலிட் ஆகும் வசதி, ஒருவருக்கு அனுப்பப்படும் மெசேஜ்கள் அந்த நாளின் முடிவில் தானாக டெலிட் ஆகச் செய்யும் வசதிகள் என பல்வேறு விதமான அம்சங்கள் வந்துள்ளன. 

எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் முதல் பிளாக் செய்தல் மற்றும் ரிப்போர்ட் செய்தலுக்கான ஆப்ஷன் வரை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.  வாட்ஸ்அப் பயனர்கள் தங்கள் மெசேஜ்களை தனிப்பட்டதாக வைத்திருக்கவும், எரிச்சலூட்டும் அல்லது ஸ்பேம் தொடர்பான மெசேஜ்களை, நபர்களை தடுக்கவும் இது உதவுகிறது.  பயனர்களின் தனியுரிமையை மனதில் கொண்டு WhatsApp வெளியிடப்பட்ட அத்தகைய அம்சம் 'Delete for All’ அம்சமாகும்.

வாட்ஸ்அப் பயனர்கள் அனுப்பிய மெசேஜ் 2 நாட்கள் மற்றும் 12 மணி நேரத்திற்குள் டெலிட் செய்யலாம். இதன் மூலம், ஒருவருக்கு தவறுதலாக மெசேஜ் அனுப்பிவிட்டால் கூட அதை குறிப்பிட்ட நேரத்திற்குள் டெலிட் செய்து விடலாம்.  இதில் ஒரு குறைபாடும் உள்ளது. அவ்வாறு மெசேஜை டெலிட் செய்தால் கூட, எதிர்முனைில் உள்ளவர்களுகு்கு ‘மெசேஜ் டெலிட் செய்யப்பட்டுள்ளது’ என்று காட்டி கொடுத்துவிடும். 

இப்படி சொல்வதால் பெரும்பாலானோருக்கு அது என்ன மெசேஜ், அது ஏன் டெலிட் செய்யப்பட்டது என்பது பற்றி அறிய ஆர்வத்தை தூண்டுகிறது. 'இந்தச் செய்தி நீக்கப்பட்டது' என்பதை பார்ப்பது சில நேரங்களில் எரிச்சலூட்டும். இன்ஸ்டாகிராமில் இதே போன்ற டெலிட் ஆப்ஷன் உள்ளது. ஆனால், அப்படி மெசேஜை டெலிட் செய்தால் எதிர்முனையில் உள்ளவருக்கு எதுவும் தெரியப்படுத்தாது. வாட்ஸ்அப்பில் மட்டுமே இந்த பிரச்சனை உள்ளது. 

டெலிட் செய்யப்பட்ட மெசேஜை பார்க்க முடியுமா?

டெலிட் ஆன மெசேஜை மீட்டெடுக்கவோ அல்லது காட்டவோ வாட்ஸ்அப்பில் பிரத்யேகமாக அம்சம் எதுவும் இல்லை.  இருப்பினும்  மூன்றாம் தரப்பு பயன்பாடுகளைப் பயன்படுத்தி நீக்கப்பட்ட WhatsApp மெசேஜ்களை படிக்கலாம். 

Vi Offer: வோடஃபோனில் புதிதாக ரூ. 99 ரீசார்ஜ் பிளான்! குறைந்த விலையில் நிறைந்த பலன்கள்!!

ஆனால், இவ்வாறு மூன்றாம் தரப்பு செயலிகளை பயன்படுத்துவதால், தரவு திருட்டு, வைரஸ் போன்ற பல ஆபத்துகள் உள்ளன.  

ஆண்ட்ராய்டு போனில் டெலிட் ஆன வாட்ஸ்அப் மெசேஜ்களை படிப்பது எப்படி?

  • உங்கள் ஸ்மார்ட்போனில் ‘Settings’ என்பதற்குச் செல்லவும்.
  • இப்போது ஸ்க்ரோல் செய்து "Apps & Notifications" என்பதைத் தட்டவும்.
  • "Notifications." என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • விருப்பத்தின் கீழ் "Notification history" என்பதைத் தட்டவும்.
  • அடுத்து 'Use notification history' என்பதற்கு அடுத்துள்ள பட்டனை மாற்றவும்
  • அறிவிப்பு வரலாற்றை இயக்கியவுடன், வாட்ஸ்அப் செய்திகள் நீக்கப்பட்டாலும் அவற்றின் அறிவிப்புகளை உங்களால் பார்க்க முடியும்.
Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios