Asianet News TamilAsianet News Tamil

ஆன்லைன் மின் கட்டண மோசடி: பணத்தை இழக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும்?

கடந்த மாத பில் இன்னும் செலுத்தப்படாததால், இன்றிரவு உங்கள் வீட்டின் மின்சாரம் நிறுத்தப்படும் என எச்சரிக்கை வாசகம் மெசேஜில் இடம்பெற்றிருக்கும்.

Electricity Bill Payment scam: How not to become a victim of this dangerous fraud sgb
Author
First Published Oct 19, 2023, 4:16 PM IST | Last Updated Oct 19, 2023, 4:19 PM IST

ஆன்லைன் மின் கட்டண முறைகேடு மீண்டும் தலைதூக்கியுள்ளது. மின்சாரக் கட்டணம் இன்னும் செலுத்தப்படவில்லை என்றும், உடனடியாக செலுத்த வேண்டும் என்றும் மெசேஜ் வந்தால் உஷாராக இருக்க வேண்டும். மோசடி செய்பவர்கள் மின்வாரியத்தில் இருந்து வரும் செய்திகளைப் போல மெசேஜ் அனுப்ப மோசடி வலை விரிப்பார்கள்.

கடந்த மாத பில் இன்னும் செலுத்தப்படாததால், இன்றிரவு உங்கள் வீட்டின் மின்சாரம் நிறுத்தப்படும் என எச்சரிக்கை வாசகம் மெசேஜில் இடம்பெற்றிருக்கும். இதுபோன்ற மோசடியில் சிக்கமால் பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

மொபைல் போனை ரீ-ஸ்டார்ட் செய்வதால் இவ்வளவு நன்மையா? பல பிரச்சினைகளைத் தீர்க்கும் எளிய வழி இதுதான்!

இணையதளத்தைச் சரிபார்த்தல்

ஆன்லைன் கட்டணங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மற்றும் முறையான மின்சார வாரியத்தின் அப்ளிகேஷன்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இணையதளத்தின் முகவரி “https://” உடன் தொடங்குவதாக இருக்க வேண்டும். பாதுகாப்பான இணைப்பைக் குறிக்கும் பேட்லாக் (padlock) சின்னம் இருக்கிறதா என்பதையும் உறுதிப்படுத்தவும்.

எந்தப் பரிவர்த்தனையைச் செய்வதற்கு முன்பும் தொகையை யாருக்கு அனுப்புகிறோம் என்று பார்த்து, அனுப்புநரின் நம்பகத்தன்மையை சரிபார்த்து உறுதி செய்துகொள்ள வேண்டும்.

Electricity Bill Payment scam: How not to become a victim of this dangerous fraud sgb

பேமெண்ட் அப்ளிகேஷன்

பணம் செலுத்தும்போது ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் முறையான வாடிக்கையாளர் சேவை மையத்தை தான் நாட வேண்டும். போன், ஈமெயில் அல்லது சாட் மூலம் உதவியைப் பெற முடியும். அதிகாரப்பூர்வ ஆப் ஸ்டோரில் இருந்து UPI  பேமெண்ட் அப்ளிகேஷன்களை டவுன்லோட் செய்து பயன்படுத்த வேண்டும்.

புகார் அளிப்பது எப்படி?

ஒரு வேளை மின் கட்டண மோசடியால் பாதிக்கப்பட்டால் உடனடி நடவடிக்கை எடுப்பது முக்கியம். இதன் மூலம் கூடுதலப் இழப்பைத் தவிர்க்க முடியும். முதலில் பயன்படுத்தும் Phone Pe, Google Pay, Paytm போன்ற UPI பேமெண்ட் ஆப் வழங்கும் உதவிப் பிரிவுக்குச் சென்று, புகார் பதிவு செய்யலாம்.

ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களின் இந்த பேமெண்ட் நிறுவனங்களின் அதிகாரபூர்வ பக்கங்களில் மோசடியைப் பற்றி புகார் அளிக்கலாம். கடைசியாக, மோசடி புகார்களை அருகில் உள்ள சைபர் கிரைம் பிரிவிலும் கொடுக்கலாம். https://www.cybercrime.gov.in/  என்ற இணையதளத்திற்குச் சென்று புகார் பதிவு செய்யலாம். அல்லது 1930 என்ற சைபர் கிரைம் பிரிவு உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

ஜோமேட்டோவுடன் கைகோர்த்த ரயில்வே! பயணிகளுக்கு நவராத்திரி ஸ்பெஷல் மெனு ரெடி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios