மொபைல் போனை ரீ-ஸ்டார்ட் செய்வதால் இவ்வளவு நன்மையா? பல பிரச்சினைகளைத் தீர்க்கும் எளிய வழி இதுதான்!
செல்போனை அவ்வப்போது ரீ-ஸ்டார்ட் செய்தாலே சில பிரச்சனைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். அதன்படி போனை ரீ-ஸ்டார்ட் செய்து என்னென்ன பிரச்சினைகளுக்கு தீர்வாக இருக்கும் என்று தெரிந்துகொள்ளலாம்.
Benefits of starting your mobile
இப்போது மொபைல் போன்கள் தொலைத்தொடர்பு சாதனமாக மட்டும் இல்லாமல் பல்வேறு அன்றாடத் தேவைகளுக்கு பயன்படுகின்றன. மொபைல் போன்களில் எப்போதாவது சில சிறிய பிரச்சினைகள் ஏற்படக்கூடும். அதுபோன்ற சந்தர்ப்பங்களில் போனை ரீ-ஸ்டார்ட் (RESTART) செய்வது தீர்வாக அமையக்கூடும்.
மொபைல் போன் மட்டுமல்ல, கம்ப்யூட்டர், லேப்டாப் போன்ற எந்த சாதனத்தையும் ரீ-ஸ்டார்ட் செய்வதால் பல பிரச்சகைைளை சரிசெய்யலாம். குறிப்பாக, ரீ-ஸ்டார்ட் செய்யும்போது மெமரியை க்ளியர் ஆகும். நெட்வொர்க், மெமரி மேனேஜ்மென்ட், பேட்டரி ஆப்டிமைசேஷன் போன்ற அம்சங்கள் சரியாக இயக்கத் தொடங்கும்.
Restarting the mobilephone
இன்டர்நெட் இணைப்பில் பிரச்சினை, போன் பேசும்போது திடீரென துண்டிக்கப்படுவது, மொபைல் அதிகமாக சூடேறுவவது, செயல்கள் அனைத்தும் மெதுவாக இயங்குவது, டவுன்லோட் பாதியில் நின்றுவிடுவது, மொபைல் சார்ஜ் செய்வதில் ஏற்படும் சிக்கல் என பல பிரச்சினைகளுக்கு ரீ-ஸ்டார்ட் மூலத் தீர்வு காண முடியும்.
இரண்டு நாட்களுக்கு ஒரு முறை அல்லது வாரத்தில் மூன்று மூறை போனை ரீ ஸ்டார்ட் செய்யலாம் என்றும் நிபுணர்கள் பரிந்துரை செய்கிறார்கள். ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கு மட்டுமின்றி ஐபோன்களுக்கும் இது பொருந்தும் இன்று சொல்கிறார்கள்.
Restarting as a solution
ஹார்டுவேர் தொடர்பான கோளாறுகளைக்கூட ரீ -ஸ்டார்ட் செய்வதன் மூலம் சரிசெய்ய வாய்ப்பு இருக்கிறதாம். தொடர்நுத பல விதமாக பயன்பட்டுக்கொண்டே இருக்கும் செல்போனை ஒரு முறை ரீஸ்டார்ட் செய்தாலே, அதன் செயல்பாட்டு வேகம் கூடும் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள்.
அவ்வப்போது ரீ-ஸ்டார்ட் செய்துவருவதால் மொபைல் போனின் செயல்திறன் அதிகரித்து நீண்ட காலம் அதனை பயன்படுத்த முடியுமாம். இதுமட்டுமின்றி, சிஸ்டம் அப்டேட்களையும் கிடைக்கும்போது உடனே டவுன்லோட் செய்து அப்டேட் செய்துவிடவேண்டும்.
Uses of restarting the mobile
சிஸ்டம் அப்டேட் எல்லாமே மொபைல் போன்கள் சிறப்பாக செயல்பட அடிப்படையானவை ஆகும். அவை போனில் நிறுவப்பட்டு புதுப்பிக்கப்படுவதற்கும் போன் ரீ-ஸ்டார்ட் செய்யவேண்டி இருக்கிறது. இதனால், ஸ்மார்ட்போன்களை பல சந்தர்ப்பங்களில் ரீ-ஸ்டார்ட் செய்வது அவற்றை சிறப்பாகச் செயல்பட வைக்கும்.
தேவையில்லாத அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்யாமல், முக்கியமான சிஸ்டம் அப்டேட்களை கிடைக்கும்போது எல்லாம் பயன்படுத்திக்கொண்டால் ரீ-ஸ்டார்ட் செய்வது ஒன்றே மொபைல் போனின் ஆயுளை அதிக அளவு நீட்டிக்கும்.