அடடே! இன்ஸ்டாகிராமில் இப்படியெல்லாம் கூட பண்ணலாமா!!

இன்ஸ்டாகிராமில் நமது பாதுகாப்பை மேம்படுத்தும் வகையிலான சில வசதிகள் உள்ளன. அது குறித்து இங்கு காணலாம்.
 

beautiful tips and tricks about instagram

முதலில் மிக முக்கியமான பாதுகாப்பு வசதி

உங்களது இருப்பிடத்தையும் எந்தெந்த இடங்களில் உங்களது கணக்கு லாகின் ஆகியுள்ளது என்பதை அறியக் கூடிய வழியை காணலாம். உங்களது இன்ஸ்டாகிராம் ஆப்ஸின் மெனுவில் செக்யூரிட்டி என்பதில் உள்ள செட்டிங்ஸ் என்பதற்கு சென்று லாகின் ஆக்டிவிட்டி என்பதை கிளிக் செய்யவும், நீங்கள் எந்தெந்த இடங்களில் லாகின் செய்துள்ளீர்கள் என்பதை பட்டியலிடும்.

அதில் நீங்கள் லாகின் செய்துள்ள இடங்களை பார்க்கலாம், மேலும் உங்களது தேவையற்ற அல்லது நீங்கள் அறியாத லாகின் ஆக்டிவிட்டிகளை நீங்கள் எளிதில் கண்டறிந்து அவற்றில் இருந்து நீங்கள் லாக்-அவுட்  செய்து கொள்ளவும் முடியும்.

டுவிட்டரைப் போல் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதற்கும் விரைவில் கட்டணம்?

உங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்கு உள்ளதா, உங்களுக்கான ட்ரிக் இதோ

ஒன்றுக்கு மேற்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்கில் மாறுவதற்கு மிக கடினமாக இருக்கும், அதற்கான எளிய வழி இதோ. உங்களது இன்ஸ்டாகிராம் ஆப்ஸின் வலது மூலையில் உள்ள ப்ரோஃபைல் ஐகானை இருமுறை டேப் செய்தாலே போதும். இதன் மூலம் எளிதில் உங்களது அடுத்த கணக்கிற்கு மாறி கொள்ளலாம்.

மூன்றாவது இன்ஸ்டாகிராமில் ஏதேனும் ஒன்றை தேடுவதற்கு, கீழே ஷெர்ச் ஐகானை கிளிக் செய்து மீண்டும் மேலே உள்ள ஷெர்ச் ஐகானை கிளிக் செய்ய வேண்டும். அதற்கு பதிலாக எளிதில் ஷெர்ச் செய்யலாம். கீழே உள்ள ஷெர்ச் ஐகானை இருமுறை டேப் செய்தாலே போதுமானது, இதன் மூலம் எளிதில் எல்லாவற்றையும் ஷெர்ச் செய்து கொள்ளலாம்.  
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios