வீட்டில் 24 மணிநேரமும் ஏசி ஓடுதா? உங்களுக்கு வல்லுநர்கள் கொடுக்கும் அட்வைஸ் இதுதான்!

ஏசி வெடிப்பு பல்வேறு காரணிகளால் ஏற்படலாம் என தீயணைப்பு அதிகாரிகள் கருதுகின்றனர். பெரும்பாலும் மின்சாரம் அல்லது இயந்திர கோளாறுகள் காரணமாக இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படலாம் என்கிறார்கள்.

AC blast tips: Fires official's two important tips on how to prevent AC blasts sgb

இந்த வார தொடக்கத்தில் நொய்டாவில் உள்ள ஒரு ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது. வீட்டில் உள்ள ஸ்பிலிட் ஏசி வெடித்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

"ஏர் கண்டிஷனர் வெடித்து ஏற்பட்ட தீ பரவி இந்த விபத்து ஏற்பட்டது. ஸ்பிரிங்லர்கள், தீயணைப்பான்கள், ஹோஸ்கள் போன்ற தீயணைப்பு அமைப்புகள் நன்றாக வேலை செய்ததால், தீ அதிகம் பரவாமல் பிளாட்டின் ஒரே அறையில் அணைக்கப்பட்டது" என தலைமை தீயணைப்பு அதிகாரி பிரதீப் குமார் சௌபே கூறினார்.

"வெளியே வெப்பநிலை ஏறக்குறைய 50 டிகிரி செல்சியஸ் ஆக உள்ளது. இதனால் ஏர் கண்டிஷனர்களின் பயன்பாடு அதிகரித்து, மின் நுகர்வு உயர்கிறது. இச்சூழலில் அசம்பாவிதங்களைத் தவிர்க்க, மக்கள் ஏசியை நாள் முழுவதும் தொடர்ந்து பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்" எனவும் சௌபே கூறினார்.

வாட்ஸ்அப்பில் வரும் ஃபேவரேட்ஸ் அம்சம்! புதிய ஃபில்டர் ஆப்ஷனை எப்படி பயன்படுத்தலாம்?

ஏசியை அவ்வப்போது தவறாமல் சர்வீஸ் செய்வது முக்கியம் என்றும், அவற்றில் அழுக்கு சேர்ந்து கூடுதல் சுமை ஏறாமல் இருக்க பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் தலைமை தீயணைப்பு அதிகாரி கூறினார். இந்த கோடை காலத்தில் நகர்புறத்தில் ஏற்படும் பல தீ விபத்துகள் ஏசி தொடர்பானவையாக உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கோடை காலத்தில் ஏசி வெடிப்பு ஏற்படுவது ஏன்?

ஏசி வெடிப்பு பல்வேறு காரணிகளால் ஏற்படலாம் என தீயணைப்பு அதிகாரிகள் கருதுகின்றனர். பெரும்பாலும் மின்சாரம் அல்லது இயந்திர கோளாறுகள் காரணமாக இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படலாம் என்கிறார்கள்.

டெல்லியில் நாள் ஒன்றுக்கு 200க்கும் மேற்பட்ட தீ விபத்துகள் ஏற்படுகின்றன. அதிகரித்து வரும் வெப்பநிலையால் டெல்லி-என்சிஆர் பகுதியில் தீ விபத்துகள் கணிசமாக அதிகரித்துள்ளன. "நாங்கள் ஒரு நாளைக்கு 200 க்கும் மேற்பட்ட தீ விபத்து தொடர்பான அழைப்புகளைப் பெறுகிறோம். இது கடந்த 10 ஆண்டுகளில் மிக அதிகம்... தீயணைப்பு வீரர்கள் அதிக அளவில் பணியில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து உபகரணங்களும் பயன்படுத்தப்படுகின்றன. டெல்லி தீயணைப்புத் துறைக்கு இது ஒரு கடினமான நேரம்" என அவர் தெரிவிக்கிறார்.

"இதுவரை டெல்லியில் மே மாதம் மட்டும் குழந்தைகள் உட்பட 12 பேர் இறந்துள்ளனர்... முக்கியமாக தொழில்துறை மற்றும் குடோன்கள் தொடர்பான பகுதிகளிலிருந்து அழைப்புகள் வருகின்றன. இந்தப் பகுதிகளில், தீயை அணைக்க அதிக நேரம் எடுக்கும்... வெப்பநிலை இன்னும் 1 டிகிரி அதிகரித்தால், வரும் அழைப்புகள் இன்னும் அதிகரிக்கும் என்று நினைக்கிறேன்" எனவும் தலைமை தீயணைப்பு அதிகாரி பிரதீப் குமார் சௌபே சொல்கிறார்.

நிலவில் புதிய விண்கலத்தைக் களமிறக்கிய சீனா! பாறை, மண் மாதிரிகளை பூமிக்குக் கொண்டுவர திட்டம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios