WhatsApp Account Ban: வாட்ஸ்அப் ஆகஸ்ட் மாசத்துல 84 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியப் பயனர்களின் கணக்குகளை முடக்கியுள்ளது. மோசடி, விதிமீறல் உள்பட பல காரணங்கள் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 16 லட்சம் அக்கவுண்ட்டுகளை யாரும் புகார் கொடுக்காமலேயே பிளாக் செய்துள்ளது.
வாட்ஸ்அப் இந்தியாவில் ஒரே மாதத்தஇல் 84 லட்சத்துக்கும் மேற்பட்ட கணக்குகளை முடக்கி இருக்கிறது. மோசடி வேலைகள் அதிகமாக நடப்பதைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மோசடி, சந்தேகமான செயல்பாடு பற்றி புகார் வந்ததை அடுத்து பல கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன.
பயனர்களுக்குப் பாதுகாப்பை உறுதிசெய்ய மெட்டா நிறுவனம் இந்த நடவடிக்கைக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது. தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 4(1)(d) மற்றும் பிரிவு 3A(7) படி, இந்தியாவில் சுமார் 84.5 லட்சம் வாட்ஸ்அப் அக்கவுண்ட்டுகளை நீக்கியிருப்பதாக மெட்டா கூறியுள்ளது. நிறைய புகார்கள் வந்ததும் கண்காணிப்பை அதிகப்படுத்தியதும் இதற்குக் காரணம் என்றும் கூறியுள்ளது.
16.6 லட்சம் அக்கவுண்ட் பிளாக்:
ஆகஸ்ட் 1 முதல் 31 வரை 16.6 லட்சம் அக்கவுண்ட்டுகள் விதிகளை மீறியதால் பிளாக் செய்யப்பட்டுள்ளன. பிளாக் செய்த மற்ற அக்கவுண்ட்டுள் சந்தேகத்தின் அடிப்படையில் முடக்கப்பட்டுள்ளன. முக்கியமாக, 16 லட்சத்துக்கும் மேற்பட்ட அக்கவுண்ட்டுகளை யாரும் புகார் கொடுக்காமலேயே கண்காணிப்பின் அடிப்படையில் அகற்றியுள்ளனர்.
வாட்ஸ்அப் அக்கவுண்ட் முடக்கத்துக்கு என்ன காரணம்?
நிறைய மெசேஜ் அனுப்புவது, ஸ்பேம் மெசேஜ்களை அனுப்புவது, மோசடி வேலைகளில் ஈடுபடுவது, தவறான தகவலை ஷேர் செய்து ஆகியவை கணக்கு முடக்கத்துக்குக் காரணமாக இருக்கலாம்.
சட்டத்துக்கு எதிரான செயல்பாடுகளுக்கு வாட்ஸ்அப்பை பயன்படுத்தினாலும் அக்கவுண்ட் முடக்கப்படலாம்.
யாரிடமாவது தவறாக நடந்துகொண்டால், தொல்லை கொடுத்தால், பாதிக்கப்பட்ட பயனரின் புகார் அடிப்படையில் அக்கவுண்ட்டை முடக்கப்படும். தவறான செயல்களில் ஈடுபடும் அக்கவுண்ட்டுகளை கண்டுபிடிப்பதில் இது முக்கியமான வழியாக உள்ளது.
