வாட்ஸ் அப் புதிய அம்சம்: 32 நபர்களுடன் வீடியோ கால் பேசலாம்!
விண்டோஸுக்கான வாட்ஸ் அப் செயலியின் புதிய அம்சம் மூலம் 32 நபர்களுடன் வீடியோ கால் பேச முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ் அப் செயலி, விண்டோஸ் பயனர்களுக்காக ஒரு அம்சத்தை வெளியிடுவதாக கூறப்படுகிறது. இந்த புதிய அம்சத்தின் மூலம், 32 நபர்களுடன் வீடியோ கால் பேச முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. WABetainfo எனும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள ஸ்கிரீன்ஷாட்டின்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட பீட்டா சோதனையாளர்கள் தங்கள் குழுக்களுடன் வீடியோ கால் பேச முயற்சிக்கும்படி, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
“வாட்ஸ் அப்பில் அதிகபட்சமாக எட்டு பங்கேற்பாளர்களுடன் குழு வீடியோ அழைப்புகளையும், அதிகபட்சம் 32 பங்கேற்பாளர்களுடன் குரல் உரையாடல்களையும் செயல்படுத்தியுள்ளது; பயனர்கள் சிறந்த தகவல்தொடர்புகளை அனுபவிப்பதை எளிதாக்குவதற்கு வாட்ஸ்அப் எதிர்காலத்தில் இந்தக் கட்டுப்பாடுகளை அதிகரிக்கக்கூடும் என்றும் நாங்கள் குறிப்பிட்டிருந்தோம். இறுதியாக, தேர்ந்தெடுக்கப்பட்ட பீட்டா சோதனையாளர்கள், Microsoft Store இல் கிடைக்கும் Windows 2.2324.1.0 என்ற அப்டேட் செய்யப்பட்ட WhatsApp பீட்டாவுடன் அதிக எண்ணிக்கையிலான நபர்களுடன் வீடியோ கால் பேச முடியும்.” என WABetainfo தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில், விண்டோஸில் இருந்து நேரடியாக தனிநபர்கள் மற்றும் 32 பேர் கொண்ட குழுக்களுக்கு வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளும் திறன் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. முன்னதாக, 32 நபர்களுடன் ஆடியோ அழைப்புகளை மேற்கொள்ள முடியும். ஆனால் மிகச் சமீபத்திய அப்டேட்டின்படி, சில பயனர்கள் 32 பேர் வரை வீடியோ கால் பேச முடியும் என தெரிகிறது.
வீடியோ அழைப்பின் போது அவர்களின் திரைகளின் உள்ளடக்கத்தைப் பகிரும் திறன், வீடியோ அழைப்பிற்கான 16 நபர்களின் ஆதரவை கோரியது உள்ளிட்டவைகளை விண்டோஸ் 2.2322.1.0 அப்டேட்டிற்காக வாட்ஸ்அப் பீட்டா முன்னர் வெளியிட்ட அம்சங்கள் குறிப்பதாக கூறப்படுகிறது.
இனிமேல் இந்த கவலை கிடையாது.. அசத்தலான லேட்டஸ்ட் வாட்ஸ்அப் அப்டேட்.!!
பழைய வாட்ஸ்அப் டெஸ்க்டாப் விஷங்களை காலாவதியானதாக மாற்றிய பிறகு, 32 பேர் வரை வீடியோ காலில் பங்கேற்கும் திறனைச் சேர்ப்பது ஒரு புத்திசாலித்தனமான நகர்வாகத் தெரிகிறது என WABetainfo குறிப்பிட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் ஸ்டோரிலிருந்து விண்டோஸ் அப்டேட்டுக்கான சமீபத்திய வாட்ஸ்அப் பீட்டாவை நிறுவிய பிறகு, சில பீட்டா சோதனையாளர்கள் 32 பேருடன் வீடியோ கால் பேசலாம், இந்த புதுப்பிப்பை பெறவில்லை என்றாலும் கவலைப்பட வேண்டாம்; அடுத்தடுத்த நாட்களில் படிப்படியாக அதிகமான மக்களுக்கு அவை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.