ட்விட்டரில் கட்டணம் செலுத்தி செய்தி வாசிக்கும் அம்சத்தை அடுத்த மாதம் முதல் அறிமுகப்படுத்த இருப்பதாக எலான் மஸ்க் கூறியுள்ளார்.

அடுத்த மாதம் முதல் செய்தி நிறுவனங்கள் ட்விட்டரில் தங்கள் செய்திக் கட்டுரைகளைப் படிக்க பயனர்களிடம் கட்டணம் வசூலிக்கும் வசதி அறிமுகம் செய்யப்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

 மாதாந்திர சந்தா திட்டமும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சந்தா செலுத்தாதவர்கள் தான் விரும்பும் ப்ரீமியம் செய்திக்கு அதற்குரிய கட்டணம் செலுத்தி படிக்கலாம். ஆனால், மாதாந்திர சந்தாவில் பதிவு செய்யாவிட்டால் அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். சந்தா செலுத்துபவர்கள் ப்ளூ டிக் பெறுவதுடன், நீண்ட ட்வீட்களை பதிவிடவும், தேவைப்பட்டால் அதை எடிட்டிங் செய்யவும் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ட்விட்டர் நிறுவனத்தின் பொறுப்பேற்ற எலான் மஸ்க் பல்வேறு மாற்றங்களைச் செய்துவருகிறார். அந்த வகையில் அவர் அறிவித்துள்ள சமீபத்திய மாற்றம் இதுவாகும். இதுபற்றி அவர் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

வாட்ஸ்அப்பில் விரைவில் வருகிறது டெலிகிராம் போன்ற புதிய வசதி!

Scroll to load tweet…

"அடுத்த மாதம் முதல் இந்தத் தளம் ஊடக நிறுவனங்கள் ஒவ்வொரு கட்டுரைக்கும் பயனர்களிடம் ஒரே கிளிக்கில் கட்டணம் வசூலிக்க அனுமதிக்கும்" என்று அவர் கூறியுள்ளார். மேலும், "மாதாந்திர சந்தாவிற்கு பதிவு செய்யாத பயனர்கள் அவ்வப்போது கட்டுரையைப் படிக்க விரும்பும்போது அந்த ஒரு கட்டுரைக்கு அதிக விலையை செலுத்த வேண்டும். இது ஊடக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் இருவருக்கும் பயன் அளிப்பதாக இருக்கும்" என அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனே பல ஊடக நிறுவனங்கள் தங்கள் இணையதளங்களை சந்தா கட்டணம் செலுத்திய பின் வாசிக்கும் வகையில் வடிவமைத்துள்ளதால், ட்விட்டரின் புதிய கட்டணத் திட்டம் பற்றி பயனர்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக, ட்விட்டரில் அனைவரும் தங்கள் பதிவுகள் மூலம் பணம் சம்பாதிப்பதற்கான வழி அறிமுகப்படுத்தப்படும் எனக் கூறி இருந்த நிறையில், எலான் மஸ்க் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

ட்விட்டரில் ப்ளூ டிக் வாங்கிய சுஷாந்த் சிங் ராஜ்புத்..எப்புட்றா.! எலான் மஸ்க்கை ஓடவிட்ட நெட்டிசன்கள்

Scroll to load tweet…

"உலகெங்கிலும் அருகிலும் தொலைதூரங்களிலும் உள்ள படைப்பாளர்களுக்கு ஆதரவு வழங்குங்கள்! பலருக்கு இது ஒரு முக்கிய வருவாய் ஆதாரமாக உள்ளது. இது இன்னும் அதிக அளவில் சிறந்த படைப்புகளை வழங்க உதவியாக இருக்கும்" எனவும் எலான் மஸ்க் கூறினார். மேலும், இதன் பலன் முழுமையாக ட்விட்டர் பதிவர்களுக்கே செல்லும் எனவும் தாங்கள் எதையும் வைத்துக்கொள்ள மாட்டோம் எனவும் அவர் சொல்லி இருக்கிறார்.

எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியதும் மாதாந்திர சந்தா செலுத்தி ப்ளூ டிக் பெறும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இது ட்விட்டரில் செய்யப்பட்ட மிகப்பெரிய மாற்றமாகப் பார்க்கப்படுகிறது. இந்தக் கட்டணத்தைச் செலுத்தாத பல பிரபலங்களின் ப்ளூ டிக்கும் சமீபத்தில் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிளாக் ஆன இன்ஸ்டாகிராம் கணக்கை மீட்டுத் தருவதாக ரூ.90,000 அபேஸ் செய்த இளைஞர் கைது