Asianet News TamilAsianet News Tamil

புனேவில் நடைபெற்ற 5ஜி டெஸ்டிங்.... 5.92 Gbps வேகம்... மாஸ் காட்டிய வோடபோன் ஐடியா..!

பூனேவில் வி தனது 5ஜி சோதனையை அரசு சார்பில் வழங்கப்பட்டு இருந்த ஸ்பெக்ட்ரகத்தில் சோதனையை நடத்தி இருந்தது. 

 

Vi 5G records top download speed of 5.92 Gbps during the ongoing trials in Pune
Author
India, First Published May 15, 2022, 4:15 PM IST

இந்தியாவில் விரைவில் 5ஜி ஸ்பெக்ட்ரத்திற்கான ஏலம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், வி (வோடபோன் ஐடியா) நிறுவனம் தனது 5ஜி நெட்வொர்க் திறனை வெளிப்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே பகுதியில் வி நடத்திய 5ஜி நெட்வொர்க் சோதனையின் போது  5.92 Gbps டவுன்லோட் வேகம் கிடைத்ததாக வி நிறுவனம் அறிவித்து உள்ளது.

வி நிறுவனம் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் சொந்தமாக 5ஜி சோதனையை மேற்கொண்டு வருகிறது. இந்த வேகமானது வி நிறுவனம் நடத்திய சிங்கில் டெஸ்ட் டிவைஸ்-இல் கிடைத்து இருக்கிறது. எரிக்சன் மேசிவ் MIMO ரேடியோ, எரிக்சன் கிளவுட் நேட்டிவ் டூயல் மோட் 5ஜி கோர்,  மற்றும் NR-DC மென்பொருளில் மிட்-பேண்ட் மற்றும் ஹை-பேண்ட் 5ஜி டிரையல் ஸ்பெக்ட்ரத்தில் சோதனை செய்யப்பட்டது. 

அசத்தல் சோதனை:

ஏற்கனவே நோக்கியா நிறுவனத்துடன் கூட்டணி அமைப்பதாக வி நிறுவனம் அறிவித்த நிலையில், சில மாதங்களுக்கு முன் வி நிறுவனம் 5ஜி சோதனையை குஜராத் பகுதியில் மேற்கொண்டது. வர்த்தக நெட்வொர்க்கில் 5ஜி சேவையை வழங்கும் போது, வி நிறுவனம் லேடன்சி-சென்சிடிவ் மற்றும் பெருமளவு இணையம் கேட்கும் தரவுகளான ஏ.ஆர்./வி.ஆர். மற்றும் 8K வீடியோ ஸ்டிரீமிங் உள்ளிட்டவைகளை எவ்வித இடையூறும் இன்றி பயன்படுத்த முடியும். தனித்துவம் மிக்க 5ஜி NR-DC எனும் மென்பொருள் இருப்பதால் இது சாத்தியமாகிறது.

Vi 5G records top download speed of 5.92 Gbps during the ongoing trials in Pune

வி 5ஜி சேவையானது பயனர்கள் மற்றும் வியாபாரங்களுக்கு தலைசிறந்த மற்றும் புதுவிதமான பயன்பாடுகளை வழங்குகிறது. முன்னதாக பூனேவில் வி தனது 5ஜி சோதனையை அரசு சார்பில் வழங்கப்பட்டு இருந்த ஸ்பெக்ட்ரகத்தில் சோதனையை நடத்தி இருந்தது. அந்த சோதனையில் 4Gbps டவுன்லோட் வேகம் கிடைத்ததாக வி அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

சலுகைகள்:

முன்னதாக வி நிறுவனம் ரூ. 82 விலையில் பிரீபெயிட் சலுகையை அறிவித்து இருந்தது. 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட வி சலுகையில் மொபைல் சாதனங்களுக்கான சோனி லிவ் பிரீமியம் சந்தா வழங்கப்படுகிறது. சோனி நிறுவனத்துடனான கூட்டணியை அடுத்து வி நிறுவனம் இந்த சலுகைகளை தனது பயனர்களுக்கு வழங்கி வருகிறது. ஓ.டி.டி. பலன்களுடன் அறிவிக்கப்பட்டு இருக்கும் ரூ. 82 வி சலுகையில் அன்லிமிடெட் அழைப்புகள் எதுவும் வழங்கப்படவில்லை. 

Follow Us:
Download App:
  • android
  • ios