ஆண்ட்ராய்டுக்கான Twitter Blue கட்டணம் நிர்ணயம்.. கொள்ளை லாபத்தில் சந்தாக் கட்டணம்?

எலோன் மஸ்க்கிற்கு சொந்தமான ட்விட்டரில் ஆண்ட்ராய்டுக்கான ட்விட்டர் ப்ளூ சந்தா விலை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Twitter Blue for Android costs at $11 per month, annual plan revealed, check details here

கூகுளின் ஆண்ட்ராய்டு பயனர்கள் ட்விட்டர் ப்ளூவின் மாதாந்திர சந்தாவை $11 க்கு வாங்க முடியும், ஆப்பிள் iOS பயனர்களின் அதே விலையில், ட்விட்டர் அதன் இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

அரசியல்வாதிகள், பிரபல நபர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் முக்கிய நபர்களை டுவிட்டரில் அடையாளம் காட்டும் வகையில் ப்ளூ குறியீடு வழங்கப்பட்டு வந்தது. இந்த நீல நிற டிக் மார்க் முன்பு இலவசமாக இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு எலோன் மஸ்க் டுவிட்டரை கைப்பற்றிய ப்ளூ டிக்கிற்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு, பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. விளம்பரதாரர்களைத் தக்கவைக்கவும், ட்விட்டருக்கு வருவாயை அதிகரிக்க உதவும் வகையில் இவ்வாறு கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில், ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான டுவிட்டர் ப்ளூ டிக் கட்டணம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி, ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மாதத்திற்கு $11 சந்தா செலவாகும். இது iOS சந்தாதாரர்களுக்கு விதிக்கப்பட்ட அதே கட்டண விகித முறையில் அமைந்துள்ளது. மாதாந்திர கட்டணங்களுடன் ஒப்பிடும் போது, வருடாந்திர திட்டத்தின் விலை சற்று மலிவாக உள்ளது.

ட்விட்டர் புளூ சந்தாவுக்கான வருடாந்திரத் திட்டத்தின் விலை $84 ஆகும், அதாவது சுமார் $8 தள்ளுபடியில் உள்ளது. அமெரிக்கா, கனடா, யுனைடெட் கிங்டம், ஜப்பான், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இணைய பயனர்களுக்கு இந்த தள்ளுபடி கிடைக்கும் என்று ட்விட்டர் தெரிவித்துள்ளது.

முன்னதாக கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில், ட்விட்டரின் அடிப்படை ப்ளூ டிக் என்பது  விளம்பரங்களின் எண்ணிக்கையில் பாதியைக் கொண்டிருக்கும் என்றும், அடுத்த ஆண்டு விளம்பரங்கள் இல்லாமல் அதிக வசதிகளை வழங்கும் என்றும் எலான் மஸ்க் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios