இது எப்படி இருக்கு? இனி இன்ஸ்டாவில் நண்பரின் பதிவில் உங்கள் போட்டோவையும் சேர்க்கலாம்!
இந்த புதிய அம்சத்தை பயன்படுத்த ஒவ்வொரு இன்ஸ்டாகிராம் பதிவின் கீழ்பகுதியிலும் இடது ஓரத்தில் "Add to post" என்ற ஆப்ஷன் இருக்கும்.
இன்ஸ்டாகிராம் பல புதிய அம்சங்களை சோதித்து வருகிறது. இப்போது இன்ஸ்டாகிராம் பயனர்கள் தங்கள் நண்பர்களின் பதிவுகளில் தாங்களும் போட்டோ மற்றும் வீடியோவைச் சேர்க்கும் அம்சத்தைச் சேர்க்க உள்ளது.
அதாவது, ஒரு பயனர் தன் பக்கத்தில் படங்களைப் பதிவிடும்போது, அவரைப் பின்தொடர்பவர்களும் தாங்கள் சேர்க்க விரும்பும் தங்கள் சொந்தப் புகைப்படங்களையும் வீடியோக்களையும் அந்தப் பதிவில் சேர்க்க முடியும். ஆனால், இது இப்போது சோதனைக் கட்டத்தில் இருக்கிறது.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒரு பதிவில் நண்பர்கள் சேர்க்கும் படங்கள் தானாக சேர்க்கப்படாது. பதிவை வெளியிட்ட பயனரே மற்றவர்கள் சேர்க்க விரும்பும் ஒவ்வொரு புகைப்படத்தையும் வீடியோவையும் பார்த்து அங்கீகரிக்க வேண்டும். பதிவிட்டவரின் அனுமதிக்குப் பிறகே நண்பர்களின் படங்கள் குறிப்பிட்ட பதிவில் சேர்க்கப்படும்.
26 பில்லியன் டாலரை வாரி இறைத்த கூகுள்! எல்லா இடத்திலும் குரோம் ஆதிக்கம் எப்படி வந்துச்சு தெரியுமா?
ஒவ்வொரு பதிவின் கீழ்பகுதியிலும் இடது ஓரத்தில் "Add to post" என்ற ஆப்ஷன் இருக்கும். குழுவாக பயணங்கள் மேற்கொள்ளும்போது, ஒவ்வொருவரும் தங்கள் மொபைலில் எடுக்கும் படங்களை ஒரே பதிவில் ஒருங்கிணைக்க இந்த அம்சம் பயனுள்ளதாக இருக்கும்.
நண்பர்களின் பதிவுகளை அனுமதிப்பதின் மூலம் குறிப்பிட்ட பதிவில் உள்ள படங்களைப் போல, பல படங்களைக் கொண்ட ஒரு படத்தொகுப்பை உருவாக்க முடியும். இந்த அம்சத்தை பயன்படுத்தி 250 பேர் வரை புகைப்படங்களையும் வீடியோக்களையும் ஒரு பதிவில் சேர்க்கலாம்.