Asianet News TamilAsianet News Tamil

இன்ஸ்டாகிராம் திடீரென முடங்கியது... ஒரு எஞ்சினியர் செய்த தவறுதான் காரணமாம்!

காலை 7 மணியளவில் இன்ஸ்டாகிராம் முடங்கியதாகத் தெரிகிறது. ஆனால், இந்தியாவில் மும்பை, டெல்லி தவிர மற்ற பகுதிகளில் உள்ள பயனர்களுக்கு பாதிப்பு இல்லை.

Instagram confirmed some users faced issues with the app, check details
Author
First Published Mar 9, 2023, 5:04 PM IST

இன்ஸ்டாகிராம் இன்று (வியாழக்கிழமை) காலை தளம் திடீரென முடங்கியது. சுமார் 4 ஆயிரம் பயனர்கள் இந்த முடக்கம் குறித்து இன்ஸ்டாகிராம் நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளனர்.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் இன்ஸ்டாகிராமில் செயலில் உள்ளன. இந்த நிலையில், எதிர்பாராதவிதமாக இன்று காலை 7 மணியளவில் பல பயனர்கள் சிக்கல்களை எதிர்கொள்ளத் தொடங்கினர். பிறகு, அடுத்தடுத்து சுமார் 3,500 க்கும் மேற்பட்ட பயனர்கள் தங்கள் இன்ஸ்டாகிராம் சரியாக வேலை செய்யவில்லை என்று புகாரளிக்கத் தொடங்கினர்.

இன்ஸ்டாகிராம் தரப்பிலும், சிக்கல் ஏற்பட்டிருப்பதை உறுதிப்படுத்தியது. இதுதொடர்பாக வெளிவந்த ட்வீட்டில், "தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மக்கள் Instagram பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த சிக்கலை விரைவில் தீர்த்துவிட்டோம், மேலும் சிரமம் ஏதும் ஏற்பட்டிருந்தால் வருந்துகிறோம்." என்று அந்த ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டது.

பெருங்கடல்களில் 171 ட்ரில்லியன் பிளாஸ்டிக் குப்பைகள்; 2040க்குள் 3 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு!

இணையதளங்களின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் டவுன்டக்கர் என்ற தளத்திலும் இன்ஸ்டாகிராம் முடக்கம் குறித்து பதிவாகியுள்ளது. அதன்படி, இன்று காலை 7 மணியளவில் இன்ஸ்டாகிராம் முடங்கியதாக தெரிகிறது. இந்தியாவில் இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு பெரிதாக எந்த பாதிப்பும் இல்லை. இருப்பினும் மும்பை மற்றும் டெல்லியில் சில பயனர்கள் புகாரளித்துள்ளனர்.

ஆரம்பத்தில் இன்ஸ்டாகிராம் வேலை செய்யாமல் இருப்பதை பார்த்ததும், எல்லா பயனர்களும் தங்களுக்கு மட்டும் தான் இந்த சிக்கல் ஏற்பட்டதாக கருதி, மொபைலை சரி செய்ய தொடங்கினர். இன்னும் சிலர் ஸ்மார்ட்போனை ரீஸ்டார்ட் செய்து, டேட்டா பேக் சரி செய்து பார்த்தனர். பின்னர், சிறிது நேரம் கழித்து டுவிட்டர், ஃபேஸ்புக் என சமூக ஊடகங்களில் இன்ஸ்டா வேலை செய்யவில்லை என்று பலர் கருத்து தெரிவித்தனர். இருப்பினும், அடுத்த சில மணி நேரங்களிலே இன்ஸ்டாகிராம் சிக்கல் சரிசெய்யப்பட்டது. 

சுவாரஸ்யமாக இதற்கு முன்பு ட்விட்டர் தளமும் இதேபோன்ற சிக்கலை எதிர்கொண்டது. மேலும் பல பயனர்கள் தளத்தை அணுக முடியவில்லை.  இருப்பினும், APIகளை (அப்ளிகேஷன் புரோகிராமிங் இன்டர்ஃபேஸ்) கவனிக்கும் ஒரு இன்ஜினியர் செய்த பிழை காரணமாக, குறிப்பாக அமெரிக்காவில், பல பயனர்களுக்கு ட்விட்டர் செயலிழந்துள்ளதாக தகவல்கள் பரவியது.

62 வயது மூதாட்டிக்கு 25 வயது கணவர்! 8வது குழந்தைக்கு காத்திருக்கும் டிக்டாக் ஜோடி!

Follow Us:
Download App:
  • android
  • ios