திடீரென தென்காசி வந்த ஆளுநர் ஆர்.என் ரவி.. ஆட்டோவில் சுற்றி காட்டிய சோஹோ சிஇஓ ஸ்ரீதர் வேம்பு..
சோஹோ நிறுவனத்தின் சிஇஓ ஸ்ரீதர் வேம்புவை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி சந்தித்துள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

சோஹோ நிறுவனத்தின் இணை நிறுவனரும், சிஇஓ-வுமான ஸ்ரீதர் வேம்புவை அறியாதவர்களே இருக்க முடியாது. தமிழகத்தின் ஒரு சிறு கிராமத்தில் பிறந்து தற்போது உலகளவில் தனக்கென ஓர் இடத்தை பிடித்து இருக்கின்றார்.
உலகளவிலும் அறியப்படும் நபராக அவர் மாறி இருக்கின்றார். சென்னை புறநகர் பகுதியில் இயங்கும் சோஹோ நிறுவனத்தின் நிறுவனரான ஸ்ரீதர் வேம்பு, சொத்து மதிப்பு 5 பில்லியன் டாலருக்கும் மேல் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தென்காசி கோவிந்தபெரி கிராமத்தில் அமைந்திருக்கும் சோஹோ நிறுவனத்தின் கிராம பள்ளி, விவசாய பகுதிகளை காண சென்றுள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
அப்போது ஆளுநரை வரவேற்ற ஸ்ரீதர் வேம்பு அனைத்து இடத்திற்கும் அவருடைய சொந்த எலக்ட்ரிக் ஆட்டோவில், அவரே ஓட்டி அழைத்து சென்றார். இதுகுறித்து ஸ்ரீதர் வேம்பு தனது எக்ஸ் தளத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கோவிந்தபெரி கிராமத்தில் இருக்கும் எங்களுடைய தோட்டம் மற்றும் பள்ளியை காண வந்தார்.
எங்களுடைய விவசாய முயற்சிகளையும், எங்களுடைய விவசாயிகள், ஆசிரியர்கள், மாணவர்களுடன் பேசினார். அவரை என்னுடைய எலக்ட்ரிக் ஆட்டோவில் அழைத்து சென்றது மகிழ்ச்சி” என்று ஸ்ரீதர் வேம்பு பதிவிட்டுள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D