தஞ்சாவூரில், ஆடு மேய்ப்பவரை சாதியை சொல்லித் திட்டி, கட்டையால் தாக்கியதால் மனமுடைந்த இளைஞர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதில், பலத்த காயமடைந்தவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகேயுள்ள கீழ வளத்தான்சேரி புதூரைச் சேர்ந்தவர் ஆர்.சதீஷ் (20). இவர் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர். ஆடு மேய்த்து வருகிறார்.

இவர் ஒரத்தநாடு அருகேயுள்ள வெள்ளூர் கிராமத்தில் உள்ள மேய்ச்சல் நிலத்தில் தனது ஆட்டை மேய்த்தார் என்று கூறப்படுகிறது.

இதனால், சதீசை நில உரிமையாளரான அதே பகுதியைச் சேர்ந்த என்.சரவணன் (39) அவரது சாதிப் பெயரைச் சொல்லித் திட்டி, கட்டையால் தாக்கியுள்ளார்.

இதனால், மனமுடைந்த சதீஷ் வெள்ளூர் கொக்கு பாலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

இதில், பலத்தக் காயமடைந்த சதீஷ் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 

இதுகுறித்து பாப்பாநாடு காவலாளர்கள் வழக்குப் பதிந்து சரவணனை கைது செய்தனர்.